பக்கம்:ஓலைக் கிளி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களும் அவற்றை லேசான தப்பைகளாகவும், ஈர்க்குகளாகவும் கிழிப்பதற்கு உபயோகமாகும் கத்திகளுந்தாம் அவர்களுடைய சொத்து. சமையல் செய்வதற்குச் சட்டிபானைகள் சிலவும் வைத்திருப்பார்கள். ஊராருக்குத் தேவையான கூடை, முறம், தட்டம் முதலான சாமான்களைச் செய்து கொடுத்துக் காசும் தானியமும் சம்பாதிப்பார்கள்.

இப்படிப்பட்ட அந்தக் கூட்டத்திலே ஒரு கிழவியும் ஒரு சிறு பையனும் இருந்தார்கள். கிழவி பையனுக்குப் பாட்டி. அவன் குழந்தையாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோனார்கள். பாட்டிக் கிழவிதான் அவனைக் காப்பாற்றி வளர்த்து வந்தாள். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/5&oldid=1027460" இலிருந்து மீள்விக்கப்பட்டது