பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

ஓ ! ஓ ! தமிழா்களே!

லாம் இன்றைக்கு நாங்கள் ஏதோ புதிதாக ஊட்டுகிற உணர்வுகளாக நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது. அது ஏதோ உங்களுக்குத் தெரியாத செய்தியை நாங்கள் சொல்ல வருகிறோம் என்றும் கருதிக் கொள்ளக் கூடாது. தமிழ் இன விடிவுக்காகவே, உரிமைக்காகவே, முன்னேற்றத்திற்காகவே, விடுதலைக்காகவே ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டை, இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே செலவிட்ட தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய உணர்வுகளைத்தாம் நாமெல்லாம் அப்போதைக்கப்போது புதுப்பித்துக் கொண்டு வருகிறோம். திரும்ப செய்து கொண்டு வருகிறோம். அவற்றை நடைமுறை நிலையிலே - நடைமுறை அரசியலுக்குப் பொருந்திய வகையிலே - நடைமுறை வரலாற்றியலுக்குப் பொருந்திய வகையிலே - பொருளியலுக்குப் பொருந்திய வகையிலே அதை விரிவாகப் பேசிக்கொண்டு வருகிறோம். என்னைப் பொறுத்த வரையிலே இந்தச் சிந்தனைகளெல்லாம் ஏற்கெனவே தோன்றி வளர்ந்து பரப்பப்பெற்ற சிந்தனைகள் தமிழைப் பற்றியோ, தமிழின வரலாற்றைப் பற்றியோ, தமிழ் உரிமைகளைப் பற்றியோ இனியாரும் புதிதாகக் கருத்துகளைச் சொல்லி விட முடியாது: சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை

பேசிப் பெருமை பெறலாம்;
செயலுக்கு வருவது எப்போது?

இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் சரி, அல்லது அடுத்த நூற்றாண்டுகள் ஆனாலும் சரி. இதே கருத்தைத்தான் நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருப்பதன் வழி, அவரவர்கள் பெரிய அறிஞர்களாகவும், பெரிய தலைவர்களாகவும் தகுதி உடையவர்களாகவும். மதிக்கப் பெறுவார்களே தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/14&oldid=1163200" இலிருந்து மீள்விக்கப்பட்டது