பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஓ ! ஓ ! தமிழா்களே !

மட்டும் கவனம் செலுத்தி, நம்முடைய பழைய கலைகளையும் பண்பாட்டியல்களையும் அதன் வகையான ஆராய்ச்சிகளையும் முயற்சிகளைச் செய்து, அதற்காகப் போராடி இந்த இனத்தை மீட்டுவிட முடியாது. அதே போல், மொழியியல் அடிப்படையிலே மட்டுமே தமிழ் மொழிக்கு இதுவரைக்கும் ஏற்பட்டுள்ள தாழ்ச்சிகளை தாக்கங்களை அழிவுகளைக் கூறி, தமிழ்மொழியின் உண்மையான தன்மைகளை ஆற்றல்களை இயற்கைச் சிறப்பியல்களை அறிஞரிடம், உலக அறிவு அவையிடம் மக்களிடம் எடுத்துக்கூறி மட்டும், இந்த இனத்தை மீட்டு விடமுடியாது

அதே போல், வேறு நிலைகளிலே ஆரியத்தோடும் முதலாளியத்தோடும் போராடி நம்முடைய விரிவான உரிமையற்ற, மூடநம்பிக்கைகளை, மத, சாதி இழிவுகளை மட்டும் கூறி இந்த இனத்தை விடுவித்து விடமுடியாது,

பின் என்ன செய்ய வேண்டும்?

பின்னே என்ன செய்யவேண்டும் என்று சொன்னால், இந்தத் தன்மைகள் அனைத்திலும் மிகத்தெளிவான சிந்தனையுடைய, சிந்தனை, அறிவாற்றலுடைய அதுவும் இவை தற்கால அரசியலொடும், பொருளியலொடும், இனவியலோடும், பண்பாட்டியலோடும், மொழியியலோடும் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்கிற அந்த நிலையை மக்களிடையே பரப்பவேண்டும். நம்முடைய கருத்துகளையும் அறிஞர் பெருமக்கள் கருத்துகளையும் கலந்துரையாடி, அவற்றில் முகாமையான கருத்துகளை மேம்படுத்தி மக்களிடம் எடுத்துக் கூறித் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தால் படிப்படியாக - சிறிது சிறிதாக மீட்டுவிக்க நம் இன மக்களை விடுவிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/24&oldid=1163205" இலிருந்து மீள்விக்கப்பட்டது