பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

47

காக, அப்படித் தமிழினங்களையெல்லாம் ஒன்றுபட வேண்டும் என்கிற ஒரு நோக்கத்திற்காக, கொள்கைக்காக உண்மையான ஒரு முயற்சிக்காக, அவ்வாறு ஒரு தலைப்பு தேவைப்படுகிறது. மற்றபடி நமது முயற்சி அனைவர்க்கும் பொதுவானது. எந்தச் சாதியைத் தழுவியோ, எந்த கட்சியைத் தழுவியோ, எந்த மதத்தைத் தழுவியோ அல்லது ஏதோ ஒரு துறையில் மட்டும் பாடுபடுகிற, ஈடுபடுகிற முயற்சியாக அதைக் கருதிக் கொள்ளக் கூடாது. அனைத்தும் ஒட்டு மொத்தமாக இந்த இனத்தை மீட்டு எடுக்க வேண்டிய முயற்சி என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்குத் தமிழ் ஈழத்திலே போராடுகிற தமிழ் இளைஞர்கள் அனைவரும் இங்கே வந்து தங்கி, ஒன்றி உறவாடியவர்கள்தாம். நாங்களெல்லாம் அதற்குத் துணையிருக்கிறோம் என்று எங்கள் பெயரை எல்லாம் செயலலிதா மேலே எழுதிக் கொடுத்திருக்கிறார். வாழப்பாடி எழுதிக் கொடுத்திருக்கிறார். இன்னும் பல கட்சிக்காரர்கள் அங்குப் போய்ச் சொல்லி இருக்கிறார்கள். எங்கள் பெயரில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கட்டும் என்றுதான் இருக்கிறோம். அதற்காக அச்சப்பட்டு அமர்ந்துவிட வில்லை; ஓய்ந்து விடவில்லை; ஒளிந்து கொள்ளவில்லை. எந்த நிலையிலும் ஏதாவது ஒரு முயற்சி நடக்க வேண்டும். அது உண்மையாக நடக்க வேண்டும். உறுதியாக நடக்க வேண்டும். தொடர்ந்து நடக்க வேண்டும்

ஏற்ற கொள்கையை எந்த நிலையிலும் ஒருவன் கைவிடக்கூடாது - என்பதே பெருமைக்குரியது:

கருமம் செய்ய ஒருவன் கைதூவேன்" - என்கிற குறளை வள்ளுவப் பெருந்தகை சொல்வார். நீ ஏதாவது ஒரு கொள்கையை மேற்கொண்டால் - ஏற்றுக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/57&oldid=1166111" இலிருந்து மீள்விக்கப்பட்டது