பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஓ ! ஓ ! தமிழர்களே !

உள்ளது, (விழாக் கொண்டாடிய அழகு) பசி அடங்குமா?

ஆட்சி வாய்ப்புள்ள பொழுது பயன்படுத்திக்
கொள்ள வேண்டாவா?

நமது அரசியல் உரிமைகள், தேவைகள் பல. பொருளியல் உரிமைகள் பல. அதை இரவலனுக்கு (பிச்சைகாரனுக்கு)ப் போடுவது போல, மக்களுக்கெல்லாம் சோறு போட்டுவிட்டு, நான் மக்களுக்கெல்லாம் சோறு போட்டுவிட்டேன்.மாணவர்களுக்கெல்லாம் சோறு போட்டுவிட்டேன் என்று சொல்லுகிறாயே - சரியாய்ப் போய் விட்டதா? இலவய வேட்டி கொடுத்தாய். சரியாகப் போய்விட்டதா? இனிமேல் எப்படிக் கிடைக்கும் இலவய வேட்டி? இனி இலவய அரிசி எங்கே கிடைக்கும்? அடுத்த ஆண்டிலிருந்து யார் கொடுக்கப் போகிறார்? இப்பொழுதே எல்லாருக்கும் சரியாகக் கிடைக்கவில்லை. இதெல்லாம் வீண் வேலை. இதற்கெல்லாம் எத்தனைக் கோடி ரூபாய் செலவு தெரியுமா? புள்ளி விளக்கத்தைப் பார்த்தீர்களென்றால் வியப்படைவீர்கள். குறை சொல்லவில்லை. நாம் செய்து கொள்ளவேண்டிய தேவைகள் நிறைய உள்ளன. வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பை இப்பொழுது இழந்து விட்டோமே! எனவே அரசியல் முயற்சிகளில் மட்டும் நாம் நிறைவடைந்து விட முடியாது? ஏதாவது சில உரிமைகளை மட்டுமே கேட்டுப் பெற்றுவிட முடியாது. பொருளியல் உரிமைகளால் நமக்கு என்ன கிடைத்து விட்டன? எங்கே நமக்கு உரிமைகள்?

நம் பொருளியல் திட்டம் என்ன உருப்பட்டது?

அரசுடைமையாக்கப்பட்ட வைப்பகங்கள். "அதிலே கடன் கொடுக்கிறோம், அது கொடுக்கிறோம். இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/72&oldid=1163470" இலிருந்து மீள்விக்கப்பட்டது