பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஓ ! ஓ ! தமிழர்களே !

யிலே, காவல் கண்காணிப்பாளராக வரவேண்டும் 2 இலக்கம் உரூபா, காசு கொடுக்காமல் எந்தப் பணியையும் கல்வியையும் வாங்கிவிட முடியாது. தகுதியினாலோ, மண்டல் அறிக்கையின்படி நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று ஏதோ இருந்தாலும் பணியில்லை.

பெரியார் பெயரால் உள்ள கல்வி
நிறுவனங்களில் மட்டும் நேர்மையாக உள்ளனரா?

சரி, பெரியார் வைத்துவிட்டுச் சென்றாரே. அந்தச் சொத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவே என்று, அங்கு சென்றால் இலவயமாக சேர்த்துக் கொள்வார்களா? ஒன்றும் முடியாது. வெளியிலே அரசுக் கல்வி நிறுவனங்களிலே 50,000 என்றால் அங்கே உரூ. 20,000 கேட்பார்கள். அவ்வளவுதான் சலுகை. அய்யோ நான் பிற்படுத்தப்பட்டவன். அப்படி என்றால் அதற்குத்தான் உரூ. 20,000 தாழ்த்தப்பட்டவன் என்றால் சரி, 2,000 குறைத்துக்கொள்; உரூ 18,000 கொடு. எப்படிப் படிப்பான்? படிப்பதே அரிது. படித்துவிட்டு வேலைக்குப் போவது அதைவிட அரிது. எனவே மானிடராய்ப் பிறத்தல் அரிதென்று சொல்வ தெல்லாம் பொய் எத்துணை மக்கள் நெருக்கம் இப்போது, அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. எங்கே போய் மானிடராய்ப் பிறக்கிறது? ஈ, எறும்பு, கொசு போல எல்லாம் மக்களாகப் பிறந்து விடுகிறார்கள். இப்போதைய மக்களைப் பார்த்தாலே, மாடு. எருமை, குதிரை போல. எனவே 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது இல்லை. மானிடராய்ப் பிறந்தாலும், கல்வி கற்றல் அரிது பணி கிடைப்பது அரிது: அப்படிப் பணி. கிடைத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/74&oldid=1166120" இலிருந்து மீள்விக்கப்பட்டது