பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

71

கொள்ளை போனதுன் பழந்தமிழ்க் கொடிமரம்!
மொள்ளைகள் பற்பல வந்து முளைத்தன!
வேதியர் வேதம் விண்ணையும் ஆண்டது!
சாதிச் சண்டைகள், சமயச் சழக்குகள்,
கல்வியில் வீழ்ச்சி, கடமையில் தொய்வு,
செல்வத் தாழ்ச்சி, சீரழி வெல்லாம்
படிப்படி யாகப் பழக்கத்தில் வந்தன.
பொடிப்பொடி யாகப் போனதுன் பெருமை !


அதன்பின், களப்பிரன், பல்லவன், மராட்டியன்,
புதிதாய் அரபியன், போர்ச்சுக் கீசியன்,
பிரெஞ்சுக் காரன் யாவரும் முறையே
அரசாண்ட பின்னை ஆங்கிலன் வந்தான்!

அதற்குள் உன்றன் அடிநிலை மறந்தது.

100


உதைகள் வாங்கி வாங்கி உன்றன்
தோலும் மரத்தது; தோள்கள் கும்பின
காலும் மடிந்தது: கைகளும் ஒய்ந்தன!
ஆகவே கிண்ணிச் சோற்றுக் கலைந்தாய்!
சாகக் கிடந்தவன் உன்றனைச் சாகாது
காத்ததும், கல்விக் கண்ணைத் திறந்ததும்,
மீத்த தடயத்தால் பழம்வர லாறு
காட்டி, மொழித்திறன் கணித்ததும்,உயிர்ப்பினை

மீட்டுக் கொடுத்ததும், பார்ப்பன மேட்டிமை

110


வீழ்த்தி உனக்கு விலக்குக் கொடுத்ததும்,
தாழ்த்திய உன்றன் தலையை நிமிர்த்ததும்
ஆங்கி லேயனே!


ஆயினும் வடவன்

தூங்கிய உன்றன் தொடையிலே கயிற்றை
நன்றாய்த் திரித்தான்; நாடு பெறுகையில்
"ஒன்றே யாமென" உன்னையும் இணைத்துப்
பொன்றா உன்றனிப் போக்கைத் தடுத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/81&oldid=1163668" இலிருந்து மீள்விக்கப்பட்டது