பக்கம்:ஓ மனிதா.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஓ,மனிதா!


1.கரிச்சான்குருவி கேட்கிறது

‘உண்மையே கடவுள்’ என்றார் காந்தி. அவருடைய மனமாற்றத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்த அரிச்சந்திரன் அதற்காகத் தன்னை மட்டுமல்ல; தன்னுடைய நலன்கள் அனைத்தையுமே தியாகம் செய்தான் கதையில்!

வாழ்க்கையில்?—அப்படி ஒருவன் இருந்தானா, இருந்தாலும் அந்தக் கதைப்படி அவன் வாழ்ந்தானா?— தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது—இன்று உங்களில் யாரும் யாரையும் உண்மை சொல்ல விடுவதில்லை.

ஏன்?—அதுவும் ஒரு கலை, ‘வாழ்க்கைக் கலை’ என்கிறீர்கள்!

தப்பித் தவறி உங்களில் யாராவது ஒருவன் உண்மை சொல்லிவிட்டால் என்ன நடக்கிறது?—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/10&oldid=1367805" இலிருந்து மீள்விக்கப்பட்டது