பக்கம்:ஓ மனிதா.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குயில் கேட்கிறது

109

அது கிடக்கட்டும், எங்களுக்கெல்லாம் ‘இன விருத்திக் காலம்’ என்று ஒரு காலம் இருக்கிறதே, உங்களுக்கு?—எல்லா காலமுமே அந்தக் காலம்தான் இல்லையா?

செய்யுங்கள்; அதற்கென்று ஒரு காலம் நேரம் இல்லாமல் ஒரு பக்கம் செய்வதைச் செய்து கொண்டேயிருங்கள், இன்னொரு பக்கம் ‘அளவோடு பெற்று வளமோடு வாழ்க’ ‘இரண்டுக்குப் பிறகு இப்போது வேண்டாம்’ ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்பது போன்ற விளம்பரங்களைச் சிவப்பு முக்கோணச் சின்னத்தோடு சுவர்களிலெல்லாம் எழுதி வையுங்கள். பத்திரிகைகளில் எல்லாம் போட்டு வையுங்கள். எதைச் செய்தாலும் எங்களைப் போல அதற்கென்று ஒரு காலத்தை ஒதுக்கிவிட்டு, மற்ற காலங்களில் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் முயற்சியை மட்டும் செய்யவே செய்யாதீர்கள், அதற்குப் பதிலாக கருத்தடைக்கு மருந்து கண்டுபிடியுங்கள்; மாத்திரை கண்டு பிடியுங்கள். லூப், நிரோத் என்று இன்னும் என்னென்ன கண்ணராவிகள் உண்டோ அந்தக் கண்ணராவிகளை யெல்லாம் பயன்படுத்தி, கைத்தொழிலை இயந்திரமய மாக்குவது போல, இனவிருத்தித் தொழிலை மருந்து மயமாக்கி விடுங்கள்—மனிதர்களல்லவா?

முன்னெல்லாம் ஆண்களும் பெண்களும் சேர்ந்தாற்போல் உள்ள இடங்களில் நீங்கள் ‘அந்த உறவை’ பற்றிப் பேசக் கூசுவீர்கள். வெட்கப்படுவீர்கள். இப்போது அதெல்லாம் இல்லை. ‘கர்ப்பத்தடை’ என்ற பேரால் அந்தப் பேச்சு ஆண்களுக்கு எதிரே பெண்களால் பேசப்படுகிறது. பெண்களுக்கு எதிரே ஆண்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/110&oldid=1371304" இலிருந்து மீள்விக்கப்பட்டது