பக்கம்:ஓ மனிதா.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ஓ, மனிதா!

இத்தனைக்கும் நான் என்ன செய்கிறேன்? என்னைப் பற்றியோ, என் குரலின் இனிமையைப் பற்றியோ தன்னடக்கத்துடனோ, தன்னடக்கம் இல்லாமலோ ஒரு வார்த்தை சொல்கிறேனா? தங்கள் பத்திரிகையில் அவ்வப்போது என்னைப்பற்றி ஏதாவது எழுதி, எனக்கு விளம்பரமும் புகழும் தேடிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வெறுங்கையுடனோ, அல்லது இரண்டு ஆப்பிள் பழங்களுடனோ எந்தப் பத்திரிகைக்காரர் வீட்டுக்காவது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும் போதே போய் நின்று, அவருடைய கழுத்தைத் தொடர்ந்து அறுக்கிறேனா? அந்தப் பத்திரிகைக்காரரை என் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து... அனுப்பிவிட்டு, ‘இது ஒரு தண்டம், என்ன எழுதுகிறானோ என்னவோ’ என்று வயிறெரிந்து நிற்கிறேனா? எதிர்த்தாற்போல் அவரை ‘இந்திரன், சந்திரன்’ என்று பாராட்டிவிட்டு வந்து, ‘என் போதாத காலம். கழுதையைக்கூடக் குதிரை என்று சொல்ல வேண்டியிருக்கிறது’ என்று அலுத்துக்கொள்கிறேனா? சொன்னபடி எழுதினால் அவனை ‘மகா ரசிகன்’ என்று போற்றி, எழுதாவிட்டால் ‘மகா அற்பன்’ என்று தூற்றுகிறேனா?

இல்லை. எனக்கு நானே சிலை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறேனோ? அந்தச் சிலை உருவாகும் இடத்துக்கு நானே முக்காடு கூடப் போட்டுக் கொள்ளாமல் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து ‘போஸ்’ கொடுக்கிறேனா?

‘ஓ, குயிலே! மதுரமான உன் கானத்தில் நாங்கள் மனத்தைப்பறிகொடுத்து நிற்கிறோம்—காரியவாதிகள் கழகம்’ என்று யாரையாவது தங்கள் செலவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/115&oldid=1371340" இலிருந்து மீள்விக்கப்பட்டது