பக்கம்:ஓ மனிதா.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானை கேட்கிறது

121

உறவு?

நல்லது, கெட்டது நடக்கும்போது நாலு பேருக்கு அஞ்சி ஓரளவு கூட்டம் சேர்க்க மட்டுமே உதவுகிறது!

இத்தகைய வாழ்க்கையே சரி என்று சாதிக்க உங்களிடையேதான் இன்று எத்தனை மூதுரைகள், எத்தனை பழமொழிகள்!...

‘தாயும் பிள்ளையுமாயிருந்தாலும் வாயும் வயிறும் வேறே,’ பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்டு...’ எக்ஸட்ரா ... எக்ஸட்ரா.

இந்த அளவுக்குச் சுயநலவாதிகளாகிவிட்ட நீங்கள்தான் இந்தியாவை ஒரே தாய் என்கிறீர்கள்; அந்தத் தாயின் வயிற்றில் இருந்தே எல்லாரும் பிறந்ததாகச் சொல்கிறீர்கள்; சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ என்கிறீர்கள்; வாழ்ந்தால் எல்லாரும் வாழ்வோம், வீழ்ந்தால் எல்லாரும் வீழ்வோம் என்று சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தொண்டை கிழியக் கத்துகிறீர்கள்.

உங்களை நான் ரகசியமாகக் கேட்கிறேன்—இதெல்லாம் நிஜமாக இல்லையே? சும்மா ஒரு தமாஷூக்குத்தானே?

இல்லையென்றால் வீட்டில் காணமுடியாத ஒற்றுமையை நாட்டில் காணமுடியுமென்று நீங்களா நம்புவீர்கள்!

தைவிடத் தமாஷானது ஏகபோகத்தை அறவே ஒழித்து, சோஷலிசத்தை இந்தக் கணமே கொண்டு வந்து, எல்லாருக்கும் பங்களா, கார், தெரிந்து ஒரு மனைவி, தெரியாமல் பல உள்நாட்டு வெளி நாட்டுத் துணைவிகள் எல்லாம் கிடைப்பதற்காக நீங்கள் கடைசியாகக் கண்டுபிடித்துள்ள இயக்கம் கூட்டுறவு

ஓ.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/122&oldid=1371363" இலிருந்து மீள்விக்கப்பட்டது