பக்கம்:ஓ மனிதா.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ஓ, மனிதா!

கச்சேரி பிரமாதமாயிருந்தது. இந்த ‘சீச’னிலேயே ‘ஏ ஒன் கச்சேரி உங்களுடையதுதான்' என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள்!’ என்று ‘காக்கா பிடித்து’க் கொண்டே உள்ளே நுழைகிறீர்கள்.

“ஏன் ஐயா, என் மானத்தை இப்படி வாங்குகிறீர்? இந்த சீசனிலேயே அந்த ஒரு கச்சேரிதான் எனக்குக் கிடைத்தது. அதுவும் கடைசி நிமிஷத்தில் கான்சலாகி விட்டது!” என்கிறார் அவர்.

அப்போதுதான் அன்றைக்கு முதல் நாள் அவருடைய கச்சேரி நடக்காமற்போனது உங்களுக்குத் தெரிகிறது. “ஹிஹி, அப்படியா? நான் வரேன்!” என்று போன சுவடு தெரியாமல் திரும்பிவிடுகிறீர்கள்.

இது ஒரு விதம்.

அலுவலகத்தில் ‘பத்தோடு பதினொன்’றாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், மானேஜர் தம் அறையிலிருந்தபடி, “யார் அங்கே?” என்கிறார். அவர் ‘எள்’ என்பதற்குள் எண்ணெயையே கொண்டுபோய்க் கொடுத்துவிட வேண்டுமென்பதற்காக, “இதோவந்து விட்டேன்,” என்று நீங்கள் எல்லாரையும் முந்திக்கொண்டு ஓடுகிறீர்கள். எங்கேயோ போயிருந்த ‘ஹெட் கிளார்க்’கைத் தேடிப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் மானேஜருக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள், “நான் இவரையா கூப்பிடச் சொன்னேன்?” “ஸ்டெனோவையல்லவா கூப்பிடச் சொன்னேன்?” என்கிறார் அவர். “ஹிஹி, ஸ்டெனோவையா? இதோ கூப்பிடுகிறேன்” என்று பிடரியை ஒரு காரணமுமில்லாமல் தடவிக்கொண்டே, திரும்புகிறீர்கள்.

இது இன்னொரு விதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/127&oldid=1371394" இலிருந்து மீள்விக்கப்பட்டது