பக்கம்:ஓ மனிதா.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஓ, மனிதா!

சாலையில் ஒரு விபத்து. அந்த விபத்தில் சிக்குண்ட ஒருவர் குற்றுயிராகக் கீழே விழுந்து கிடக்கிறார். அந்த வழியாக எத்தனையோ பேர் வருகிறார்கள்; போகிறார்கள், அவர்களில் படித்தவர்கள் உண்டு; பக்திமான்களும் உண்டு. தொண்டர்கள் உண்டு; தலைவர்களும் உண்டு. அவர்களில் ஒருவராவது அந்த விபத்துக்குள்ளான மனிதரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை; ‘யார் எப்படிப் போனால் நமக்கென்ன, நம்முடைய வேலையை நாம். பார்ப்போம்’ என்று பேசாமல் போய்விடுகிறார்கள். கடைசியாகக் கூலி வேலை செய்யும் பெண் ஒருத்தி அந்த வழியே வருகிறார். குற்றுயிராகக் கீழே விழுந்து. கிடக்கும் மனிதரைப் பார்க்கிறாள். ‘யார் எப்படிப் போனால் நமக்கென்ன, நம்முடைய வேலையை நாம் பார்ப்போம்’ என்று அவள் போய்விடவில்லை; ‘போலீசார் வரட்டும்; ஆம்புலன்ஸ் வரட்டும்’ என்றும். அவள் காத்திருக்கவில்லை. விபத்துக்குள்ளானவரை உடனே ஒரு டாக்சியில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு போகிறாள்; அதற்காகத் தன்னிடமிருந்த ஒரே சொத்தான மூக்குத்தியை மார்வாடிக் கடையில். ‘அடமானம்’ வைத்துச் செலவழிக்கிறாள். அதன் காரணமாக விபத்துக்குள்ளானவர் பிழைக்கிறார். இந்தச் செய்தி ‘ஆன்மிக வழியிலாவது மனிதனை மனிதனாக, வாழ வைக்கப் பார்ப்போம்’ என்று அல்லும் பகலும் அனவரதமும் முயன்று கொண்டிருக்கும் காமகோடி, பீடம் சங்கராச்சாரிய சுவாமிகளின் காதில் விழுகிறது. அவர் அவளை அழைத்துக் கவுரவிக்கிறார்; நீர்க்குடம் ஒன்றைப் பரிசாக அளித்து மகிழ்கிறார். மற்றவர்கள்?

உண்மையில் பாராட்டு விழா நடத்துவதாயிருந்தால் அவளுக்கல்லவா நடத்த வேண்டும்? பொன்னாடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/19&oldid=1370260" இலிருந்து மீள்விக்கப்பட்டது