பக்கம்:ஓ மனிதா.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஓ மனிதா

மனிதா! அரசியல் உலகத்தில் யார் யாரையோ முந்திக்கொண்டு வந்து நீ தலைவனாகிவிட்டாய் என்பதற்காக உனக்குப் பின்னால் ஆயிரமாயிரம் தொண்டர்கள் அவ்வப்போது கொடி பிடித்து அணி வகுத்து வந்து ‘வாழ்க, வாழ்க!’ என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? யாரோ படித்துச் சொன்ன பத்துப் பதினைந்து இங்கிலீஷ் கதைகளைத் தமிழில் கொஞ்சம் உரு மாற்றி எழுதிவிட்டு, ‘நான் தான், நானேதான், இலக்கிய உலகத்தின் சாம்ராட்’ என்று நீ மார்தட்டிக் கொள்வதை நம்பி, சதா உன்னைச் சுற்றிப் பத்துப் பேர் இருந்து கொண்டு, நீ ‘அச்’ சென்று தும்மினால் கூட ‘ஆண்டன் செகாவ்கூட இப்படித் தும்மியிருக்க மாட்டான்!’ என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? கலை உலகத்தில் பரிதாபத்துக்குரிய படாதிபதிகள் சிலரால் நீ ‘நட்சத்திர’, மாக்கப்பட்டு விட்டாய் என்பதற்காக எப்போது பார்த்தாலும் உன்னைத் தொடர்ந்து ஒரு கூட்டம் வந்து, ‘அண்ணனை மிஞ்ச இன்று ஹாலிவுட்டிலேகூட ஆள் இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறதே, அந்தக் கூட்டத்துக்கு அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? பழம்பெரும் மிராசுதார் ஒருவருக்கு மகனாகப் பிறந்ததைத் தவிர, வேறொன்றும் செய்யாத நீ, வரப்பு மேட்டில் குடை பிடித்து நிற்க, வதைக்கும் வெயிலில் உனக்குச் சொந்தமான வயல் வெளிகளில் வாடிய வயிறுகளுடன் வேலை செய்து கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/39&oldid=1370758" இலிருந்து மீள்விக்கப்பட்டது