பக்கம்:ஓ மனிதா.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொக்கு கேட்கிறது

39

வில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? யாரைப் பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பிடித்து, யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து, எப்படியோ ஓர் அலுவலகத்தின் அதிகாரியாகிவிட்ட உன்னிடம், உனக்குக் கீழே வேலை பார்க்கும் சிப்பந்திகளெல்லாம் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்களே, அவர்களுக்கெல்லாம் அறிவில்லை, உனக்குத்தான் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா?—இல்லை மனிதா, இல்லை. உனக்குள்ள அறிவு அவர்களுக்கும் உண்டு—ஏன் இந்த உலகத்தில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்குமே அறிவு என்று ஒன்று நிச்சயமாக உண்டு. ஆனால் அது எதையோ எதிர் நோக்கிச் சமயத்துக்கு ஏற்றாற்போல், சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது—அவ்வளவே.

வாய்க்கால் கரை ஓரங்களில் என்னைப் பார்த்திருக்கிறாயா, நீ? பாசு பதாஸ்திரத்துக்காக அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கி ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தானாமே, அந்த மாதிரி தவம் செய்து கொண்டிருப்பேன் நான். தெள்ளிய நீர் சல சலத்துச் செல்லும் அந்த வாய்க்காலில் சிறுமீன்கள் வெள்ளியெனத் துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருக்கும். அந்த மீன்களை எதிர்பார்த்து மேலே வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவை சட்டென்று, பாய்ந்து வந்து அவற்றில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போய்விடும். நானோ அப்படி இப்படி ஆடாமல் அசையாமல், கால் மாற்றி நின்று கொண்டே இருப்பேன். இப்படி அடக்க ஒடுக்கமாக நிற்பதால் எனக்கு அறிவில்லை என்றும், பறந்து பறந்து வந்து, பாய்ந்து பாய்ந்து வந்து மீனைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/40&oldid=1370764" இலிருந்து மீள்விக்கப்பட்டது