பக்கம்:ஓ மனிதா.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஓ, மனிதா!

கொத்திச் செல்லும் மீன் கொத்திப் பறவைக்குத்தான் அறிவிருக்கிறது என்றும் நீ நினைத்துக் கொண்டு விடுவதா?

அப்படி நினைத்து உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வை சொன்னாள்—அதையும் எப்படிச் சொன்னாள்?—ஆறறிவுள்ள உனக்கு ஐந்தறிவுள்ள என்னைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள்.

‘அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா;—மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாம் கொக்கு.’

என்னைக் கவனிக்கும்போது இதையல்லவா நீ கவனிக்க வேண்டும்? இதை விட்டுவிட்டு என் மூக்கையா கவனித்துக் கொண்டிருப்பது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/41&oldid=1370766" இலிருந்து மீள்விக்கப்பட்டது