பக்கம்:ஓ மனிதா.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. சிட்டுக்குருவி கேட்கிறது

லகத்தில் எத்தனையோ பறவைகள் இருந்தாலும் என்னைப்போல் வேறு எந்தப் பறவையும் உங்களுடன் அவ்வளவு நெருங்கிப் பழகுவதில்லை.

உங்கள் வீட்டு விட்டங்களின் மேலும், சாளரங்களின் மேலும் நாங்கள் ‘ஜிவ்’வென்று பறந்து வந்து உட்காருவதையும், ‘கிச்சுக் கிச்சு’ என்று காதல் மொழி பேசிக் களிப்பதையும் நீங்கள் அன்றாடம் பார்த்துப் பெருமூச்சு விடுகிறீர்கள். அவ்விதம் பெருமூச்சு விடும் போதெல்லாம் இந்தச் சிட்டுக் குருவிகளுக்குள்ள நிம்மதிகூட நமக்கு இல்லையே? எந்த நேரம் பார்த்தாலும் ஏதாவது ஒரு கவலை நம்மைப் பிடித்து வாட்டிக் கொண்டே இருக்கிறதே! என்று நீங்கள் குமைகிறீர்கள்.

மாதம் நூறு ரூபாய் வருமானம் வரும்போது இருந்த கஷ்டம், ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் போதும் அப்படியே இருக்கிறது.

இரண்டு ஏக்கர் விளைநிலத்துக்கு அதிபதியாயிருந்த போது பட்ட, அல்லல்கள் இருபது வேலி விளைநிலத்துக்கு அதிபதியான பிறகும் குறையவில்லை.

குச்சு வீட்டில் வாசம் செய்தபோது இருந்த மன உளைச்சல், மச்சு வீட்டுக்குக் குடியேறியும் தீரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/64&oldid=1370854" இலிருந்து மீள்விக்கப்பட்டது