பக்கம்:ஓ மனிதா.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைரவர் கேட்கிறார்

73


ந்த லட்சணத்தில் வாழும் உங்களைச் சேர்ந்த ஒருவர் ‘விவேக சிந்தாமணி’ என்று ஒரு நூல் இயற்றியிருக்கிறார். அந்த நூலில் அவர் ‘விவேக’த் தோடு பாடியுள்ள விருத்தத்தைப் பாருங்கள்:

'குக்கலைப் பிடித்து நாவிற்
கூண்டினில் அடைத்து வைத்து
மிக்கதோர் மஞ்சள் பூசி
மிகுமணம் செய்தா லுந்தான்
அக்குலம் வேற தாமோ?
அதனிடம் புனுகுண் டாமோ?
குக்கலே குக்க லல்லால்
குலந்தனிற் பெரிய தாமோ?

இவர் குலத்தைப் பார்த்த விதம் இப்படி; இவருக்கு முன்னாலேயே ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்று முத்தாய்ப்பு வைத்துப் பாடிய அவ்வை அதோடு நின்றாளா? இல்லை; ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்று வேறு ‘சஸ்பென்ஸ்’ வைத்துப் பாடினாள். அது என்ன ‘சஸ்பென்ஸ்?’ என்கிறீர்களா? ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்றதும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆண் ஜாதி பெண் ஜாதி-ஆக இரண்டு ஜாதி என்றுதானே நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லவில்லை அவள்; ‘மேதினியில் இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்’ என்கிறாள் பின்னால் அதற்கு விளக்கம் கொடுக்கும்போது. அவள் நிலை அப்படி; எப்போதும் யாராவது ஏதாவது இடுவதையே எதிர்பார்த்து வாழ்ந்தவளல்லவா அவள்?


ஓ.-5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/74&oldid=1369732" இலிருந்து மீள்விக்கப்பட்டது