பக்கம்:ஓ மனிதா.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

ஓ, மனிதா!

‘இலையைப் போடு, இலையைப் போடு!’

‘யாரடா அவன் யாரடா அவன்?’

‘திருடன், திருடன்!’

இந்த மாதிரி நீங்கள் சொல்லிக் கொடுப்பதை நான் திருப்பிச் சொல்லிவிட்டால் போதும்; உங்கள் உச்சி குளிர்ந்து விடுகிறது. அதற்காக உங்கள் வீட்டுப் பெண் எனக்கு முத்தம் கொடுக்கக்கூட வந்து விடுகிறாள்!

இதில் ஒரு வம்பு என்னவென்றால், மற்ற பிராணிகளில் ஆண் எது, பெண் எது என்பதை அவற்றின் தோற்றத்திலிருந்தே உங்களால் கண்டுபிடித்துவிட முடியும்; எங்களில் ஆண் கிளி எது பெண் கிளி எது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. காரணம் தோற்றத்தில் இரண்டுமே ஒன்ருயிருப்பது தான். இதனால் ஆண் கிளி என்று தெரியாமல் உங்கள் வீட்டுப் பெண் எனக்கு ஆசையோடு முத்தம் கொடுக்க வந்துவிடுகிறாள். என்னதான் கிளியாயிருந்தாலும் எனக்கும் வெட்கம் இருக்காதா? அதனால், அவள் முத்தம் கொடுக்க வரும்போது நான் முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன். அவள் விடுகிறாளா? என் மூக்கைப் பிடித்து ஒரு திருப்புத் திருப்பி ‘இச்’ என்று ஒன்று கொடுத்தே விடுகிறாள்!

இப்படிக் கொடுப்பவள் கன்னிப் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை; ஏதோ குழந்தை விளையாட்டு, இல்லை ‘காதல் விளையாட்டு’ என்று விட்டுவிடலாம். கலியாணமாகி இன்னொருவனுக்கு மனைவியானவள் எனக்கு இப்படிக் கொடுத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/95&oldid=1371051" இலிருந்து மீள்விக்கப்பட்டது