பக்கம்:ஔவையார் கதை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

11


வளர்த்திட்ட பெற்றோர்கள் அன்று
வாய்த்த மணாளரைக் கண்டு
கிளர்மணம் செய்குவோம் என்று
கேட்டவர்க்குச் சொன்னார் நன்று
மணமகன் வீட்டார்கள் வந்தார்
மணம்பேசி முடிக்க விரைந்தார்
மணமகள் தனைக்காண நினைந்தார்
வளர்ப்பவர் பெண்ணரு கடைந்தார்
பணிகள்பல பூட்டியணி செய்தார்
பாவையைப் பேரழகு செய்தார்
மணம்பேச வந்தவர்கள் முன்னே
வந்திடுக என்றினிது சொன்னார்
முக்காடு போட்டங்கு வந்தாள்
முன்கோலை யூன்றியவண் வந்தாள்
அக்கணமே கண்டவர் எழுந்தார்
அன்னாளை மனம்பேசப் பயந்தார்
இச்செய்தி அறிந்தார்கள் எல்லாம்
இனிமணம் பேசவோ வல்லார்
அச்சமே கொண்டேதும் பேசார்
அவள்மனம் போல்விடக் கூசார்
உலகிற்கு நற்பணிகள் செய்ய
உடலின்பம் விட்டனள் மெய்யாய்
அலகிலாப் பேர றங் கூற
அவதரித் தாளவள் நேராய்
எல்லோர்க்கும் தாயாகிவிட்டாள்
இனியநல் லறவுரைகள் சொற்றாள்
வல்லார்க்கும் வல்லவள் ஆனாள்
வையத்தின் ஞானவொளி யானாள்
தாயான பெண்ணவ்வை என்பார்
தாரணிக் கமுதமொழி சொல்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/11&oldid=507901" இலிருந்து மீள்விக்கப்பட்டது