12
ஔவையார் கதை
சேயாக மக்கள்தமை எண்ணி
செய்யவறம் காட்டிடுவர் நண்ணி
பெற்றோர்கள் இட்டபெயர் போச்சு
பேர்ஔவை எனச்சொல்ல லாச்சு
உற்றோர்கள் தெய்வமென லாச்சு
உயர்தமிழ் அரசியெனப் பேச்சு
தமிழரசி ஔவையை அறியார்
தமிழினில் ஏதுமே அறியார்
கமழ்ந்திடும் ஞானமணம் காணக்
கற்றவர்க் கவள்பாடல் வேனும்
தகடூரில் தோன்றித் தமிழ்க்கலை யாசியாய்த் திகழ்ந்து வரும் ஔவையாரின் அருமை பெருமைகளே அந்நாட்டுச் சிற்றரசனும் பெருவள்ளலும் ஆகிய அதியமான் கேள்வியுற்றான். ஔவையாரைத் தனது அரசவைப் புலவராக ஆக்க விரும்பினான். அரசர்களிடமும் வள்ளல்களிடமும் பரிசுபெற்றுத் தம் வாழ்க்கையை வளமுற நடத்தும் குணமுறு பாணர் குடியில் பிறந்த ஔவையாரும் தமிழ் வள்ளலாகிய அதியமானப் புகழ்ந்துபாடிப் பரிசுபெறப் பேரார்வமுடன் இருந்தார். ஒருநாள் அவனது சபையை அடைந்து அவனைப் புகழ்ந்து பாடினார். ஔவையாரின் அருந்தமிழ்ப் புலமையை அதியமான் அகமகிழ்ந்து போற்றினன். அவரிடத்துப் பேரன்பு காட்டினான். பரிசிலை உடனே கொடுத்தால் பைந்தமிழ்ச் செல்வியார் நம்மைப் பிரிந்து சென்று விடுவாரே என்று எண்ணிக் காலத்தை நீட்டினான். பல நாட்கள் அதியமான் அரண்மனேயில் தங்கியிருந்தும் பரிசு கிடைக்கப்பெறாத ஔவையாருக்கு அதியமான் மீது அளவற்ற கோபம் உண்டாயிற்று. பொறுமை யிழந்தார்.