பக்கம்:ஔவையார் கதை.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஔவையார் கதை

 லிக்கனி என்று நினைந்து வாயிலிட்டுச் சுவைத்த ஒளவையார், அதனிடம் கண்ட அளவற்ற அமுதச் சுவையைக் கண்டு, உண்டு, களிகொண்டு, “ஆகா! அரசே! ஈதென்ன வியப்பாயிருக்கிறது! தேவர்கள் உண்டார்கள் என்று சொல்லப்படும் தெள்ளமுதத்தினும் நல்லமுதமாக அன்றே இந்த நெல்லிக்கனியுள்ளது! இது உனக்கு எப்படிக் கிடைத்தது? இதன் வரலாறென்ன?” என்று அதியமானே வினவினார்.

பாட்டு

தாயே! தமிழ்ச்செல்வி! தந்த இந்த நற்கனியும்
தூய தமிழ்ப்பொதிகைத் தொன்மலையில் கண்டுற்றேன்
தவமுனி இன்னருளால் சார்ந்திட்ட கனியிதனை
நவமுற உண்டவர்கள் நாட்கள் பல வாழ்ந்திடுவார்.
பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை பழுப்பதாகும்
இன்னமுத நற்கனியாம் இந்தநெல் லிக்கனியே
யானிதனை உண்டாலோ யாதுபயன் உண்டம்மா
தேனமுதத் தீங்கனியைத் தின்றுவாழ்ந் தென்னபயன்
போர்கள் பலபுரிந்து பல்லுயிர்கள் போக்கிடுவேன்
சீரமைந்த நீருண்டால் தெய்வத் தமிழோங்கும்
எண்ணரிய பன்னூல்கள் இப்புவியர் பெற்றிடுவர்
பண்ணார்ந்த இன்னறிவைப் பார்முழுதும் உற்றோங்கும்
இந்தநலம் சிந்தையெண்ணி இங்ங்னம்யான் செய்திட்டேன்
செந்தமிழ் வாழநீரும் சிறக்கவே வாழவேண்டும்
என்றினிது பேசியிட்ட இயலரசன் அதியமானின்
நன்றான பொற்குணத்தை நாவார வாழ்த்தியிட்டார்
தனிப்பெருமை சொல்லாது கருத்துள் அடக்கிகின்றாய்
தனியேன் உயிர்தழைக்க இனிதுண்ண வேண்டிநின்றாய்
சாக்காடு நீக்கமுறத் தந்துகனி உணச்செய்தாய்
தாக்கும் பகைவர்சளைத் தவிடுபொடி யாக்கிவிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/18&oldid=507908" இலிருந்து மீள்விக்கப்பட்டது