பக்கம்:ஔவையார் கதை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

25


அதுகண்ட ஒளவை எழுந்தார்
அதியமான் நிலைகண் டுணர்ந்தார்
தளர்ந்திட்ட அஞ்சியின் நெஞ்சம்
தனிவீரம் கொள்ளவுரை சொல்வார்
கிளர்ந்தெழும் வீரமொழி சொல்வார்
கிளையான படைவீரம் விள்வார்
அவ்வையின் ஊக்கமொழி யாலே
அதியமான் போருக் கெழுந்தான்
நவ்விமேல் பாய்புலிப் போலே
நயந்தவன் போரைப் புரிந்தான்
பகைகொண்ட இருகட்சி யாரும்
பார்த்தவர் நடுங்க மலைந்தார்
வகைகொண்ட சேனைமிகு சேரன்
வன்மையுடன் வேலே விடுத்தான்
சேரனின் கூரிய வேலும்
தீயகடுங் கூற்றினைப் போல
சீரதிய மானவன் மார்பில்
சென்று டுருவியே செல்லும்
வலமிக்க தேரில் இருந்த
வள்ளலும் உயிரை யிழந்தான்
புலியன்ன மன்னவன் போரில்
பொன்னுடல் சாயவே மாய்ந்தான்
மன்னவன் மாய்ந்ததைக் கண்ட
மதிவல்ல அவ்வையார் கொண்ட
இன்னலுக் கோரெல்ல யில்லை
எதுசெய்வர் வந்தது தொல்லை
ஐயையோ அதியன் மறைந்தான்
அவனருள் வள்ளன்மை என்னே!
மெய்யாக மார்பைத் துளைத்த
வேல்பல இடங்கள் துளைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/25&oldid=507915" இலிருந்து மீள்விக்கப்பட்டது