பக்கம்:ஔவையார் கதை.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஒளவையார் கதை


நிலையான நும்கவிதை நீடுபுகழ் நாடிதனில்
கள்ளர்கள் யாருமில்லை யானே அக் கள்வனவன்
தள்ளரிய நும்பிரிவு தாங்கரிய பெருந்துன்பம்
தந்ததனைல் நந்தம்மைத் தடுத்துமறித் திடச்செய்தேன்
இந்தவித மன்றியுமை இங்குமீண் டழைப்பரிதே
என்றெண்ணிச் செய்திட்டேன் நன்றுபொறுத் திட்டருளும்
கன்றுமணம் ஆறியெனைக் கனிந்தினிது வாழ்த்து மென்றான்
பாரியவன் பேரன்பைச் சீருறவே தாமறிந்தார்
நேரில்லா அவனருளை நினைந்துநினைங் தின்புற்றார்.

வசனம்

ஒளவையாரிடம் போன்புகொண்ட பாரியைப்போலப் பற்பலர் அந்தக்காலத்தில் செந்தமிழ் நாட்டிலே இருந்தார்கள். பழையனூர் என்னும் ஊரிலே வாழ்ந்த உத்தம வேளாளன் ஒருவன் சிறந்த அருள்வள்ளல். நிறைந்த தமிழறிஞன். காரியென்னும் பேருடையான். நேரில்லாச் சீருடையான். அன்னவனும் நம் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையாரிடம் அளவற்ற அன்புகொண்டிருந்தான். ஒளவையார் ஒருசமயம் அவனிடம் சென்றார். சிலநாள் அவனது மனையில் விருத்தாளியாக இருந்து மகிழ்ந்தார். ஓய்ந்த நேரமெல்லாம் ஆய்ந்த தமிழ்க்கவியால் அவனை மகிழ்வித்தார்.


பாட்டு

பழையனூர் வேளாளன் உழையவர்க் கருளாளன்
தழைமனத் தாளாளன் விழைந்திடும் பொருளாளன்
காரி என் பானுடைய சீர்விருந் தாயமர்ந்தார்
சார்ந்தசின் னைட்பின்னர் விடைபெறச் சார்ந்திட்டார்
அன்னவன் தன்னிலத்தில் அருங்களை பிடுங்கிநின்றான்
துன்னிட்ட அவ்வையரைத் தவிர்க்கவே எண்ணிட்டான்
கையிருந்த களைக்கட்டை அவ்வையின் கைக்கொடுத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/28&oldid=507918" இலிருந்து மீள்விக்கப்பட்டது