பக்கம்:ஔவையார் கதை.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

29


வெய்யகளை நீக்கிடுவீர் வேண்டினன் என்றுரைத்தான்
காரியின் பார்வையினல் கருத்துணர்ந்த அவ்வையரும்
நேராக அதுவாங்கி நீள்களைகள் போக்கலுற்றார்
இன்றுநாம் இங்குவிட்டுச் செல்லுதற் கியலாது
என்றவ்வை உணர்வரைக்கும் சென்றவன் மீளவில்லை
அன்னவன் சூழ்ச்சிதனை அவ்வையார் தாமுணர்ந்தார்
இன்னருள் காரியவன் பொன்னைன அன்புணர்ந்தார்
உள்ளத்தில் பொங்குகவி வெள்ளத்தால் போற்றியிட்டார்
வள்ளலின் உள்ளமதை வாயார வாழ்த்தியிட்டார்.

வசனம்

அந்தக் காலத்தில் சேரமான் மாவெண்கோ என்னும் மன்னனன் ஒருவன் பெருவிருந்தொன்று நடத்தினான். அந்த விருத்துக்கு ஒளவையாருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான். அச் சேரமானும் ஒளவையாரிடத்து அளவற்ற போன்பு கொண்டவன். அவனது அழைப்பைக் கண்ட ஒளவையார் காரியிடம் விடைபெற்று, நேராகச் சேரமான் செல்வ மாளிகையைச் சென்றடைந்தார். அவனேக் கண்டார். அப்போது விருந்துநேரம் நெருங்கி விட்டது. நாட்டிலுள்ள பல்வேறு மன்னர்களும் கல்வி வல்ல புலவர்களும் செல்வப் பெருமக்களும் விருந்துக்கு அவன் மாளிகையில் வந்து நிறைந்துவிட்டார்கள். எல்லோரையும் விருந்து மன்றத்தில் வந்து அமருமாறு அன்போடு வேண்டினான். ஒளவையாரும் அங்குச் சென்று ஒர் இலை யின் முன்பு அமர்ந்தார்.

பாட்டு

அறுசுவை உணவுள்ள விருந்து
ஆர்ந்தவர்க் கமுதாம் விருந்து
உறுசுவைப் பண்டங்கொள் விருந்து
உற்றவர்க் கரிதாம் விருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/29&oldid=507919" இலிருந்து மீள்விக்கப்பட்டது