பக்கம்:ஔவையார் கதை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

31


வசனம்

பின்னர்ச் ஒளவையாரைத் தனது அருகில் அமரச்செய்து அருஞ்சுவை யுணவூட்டித் தானும் உண்டு மகிழ்ச்சி கொண்டான். தான் உள்ளன்பால் உரிமையோடு செய்த செயலை உணர்ந்து போற்றிய உயர்தமிழ் மூதாட்டியை உவந்து பாராட்டினான். அவனது அரண்மனையில் பன்னைளிருந்து, பின்னர் விடைபெற்று வழிநடந்தார். திருக்கோவலூரை நோக்கி வந்துகொண்டிருக்கும் வழி நடுவே பெருமழை பெய்யத் தொடங்கியது. மழைக்கு ஒதுங்கிநிற்க இடையே இடம் ஏதும் இல்லாமையால் விரைந்து திருக்கோவலூரை அடைந்தார். இரவுவேளை, மழையோ விட்டபாடில்லை. உடுத்திய ஆடை மிகவும் நனைந்துவிட்டது. உடலோ குளிரால் நடுங்கியது. ஊருள் நுழைந்ததும் எதிரே காணப்பெற்ற குடிசையுள்ளே ஒளவையார் நுழைந்தார்.

பாட்டு

அகத்தில் நுழைந்த ஒளவையின் வரவை
அங்கவை சங்கவை மங்கையர் கண்டார்
தாயே வருகெனத் தழுவியே நின்றார்
தையலர் யாரெனப் பையவே கண்டார்
யாரிவர்? நீங்கள் பாரியின் மக்காள் !
சீருற வாழ்ந்தீர்! சிறுகுடில் வந்தீர் !
பாரியோ மறைந்தான் பார்ப்பவர் இல்லையோ ?
பார்த்திபர் சினத்தீப் பற்றி அழித்ததோ ?
கலங்கிப் புலம்பும் கற்றமூ தாட்டி
நடுங்கும் உடலம் நங்கையர் கண்டார்
நீலச்சிற் றுடை யொன்று நீட்டினார்
நீவிர்இவ் வாடை உடுத்திடும் என்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/31&oldid=507834" இலிருந்து மீள்விக்கப்பட்டது