பக்கம்:ஔவையார் கதை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஒளவையார் கதை


சேரனுக்கு எழுதியது

சேரலர்கோன் சேரன் செழும்பூங் திருக்கோவல்
ஊரளவும் தான்வருக ! உட்காதே—பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவையை யுங்கூடத் தான்.

சோழனுக்கு எழுதியது

புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
தகாதென்று தானங் கிருந்து—நகாதே
கடுக வருக ! கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள்.

பாண்டியனுக்கு எழுதியது

வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே—தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியஈர் ஒன்பான்நாள்
ஈண்டு வருக ! இயைந்து.

வசனம்

ஒளவையாரின் ஒலையை அரசர் மூவரும் கண்டார்கள். அத் தெய்வத்தமிழ் மூதாட்டியின் அழைப்பை மறுப்பின் வெறுப்புடன் ஏதும் வசைக்கவி பாடிவிடலாகாதே என்று அஞ்சிப் பாரிமகளிரின் திருமணத்தை முடித்துவைக்கத் திருக்கோவலூரை வந்தடைந்தனர்.

பாட்டு

வரிசைகள் பலகொண்டு வந்து நின்றார்
வள்ளலின் மக்கள்மணம் காண வந்தார்
அரியபொற் கலன்கள் பல கொண்டு வந்தார்
ஆய்ந்தபட் டாடைகள் தாம்கொணர்ந்தார்.
சேரனும் சோழனும் பாண்டி மன்னும்
சேரவே சீர்களுடன் வந்த டைந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/36&oldid=507925" இலிருந்து மீள்விக்கப்பட்டது