பக்கம்:ஔவையார் கதை.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஔவையார் கதை

37


பேரரசர் மூவரும் ஆங்கி ருக்க
பெற்றியுடன் வாராதார் யாரி ருப்பார் !
சிற்றரசர் எல்லாரும் சேர வந்தார்
செந்தமிழ்த் திருமணம் காண வந்தார்
பற்றுள்ள புலவர்பலர் பாடி வந்தார்
பாரியைப் பாடாத புலவ ருண்டோ !
கவிமன்னர் புவிமன்னர் கடிது வந்தார்
காதல்மிகு நன்மணம் நடக்க என்றார்
கவியரசி ஔவைகண் காட்டி நின்றார்
கற்றகலை வாணரிசை யார்த்து நின்றார்
இன்னிசைப் பல்லியம் முழங்கு மெங்கும்
இன்பமண மாலைகள் தொங்கும் எங்கும்
கன்னலும் வாழையும் கமுகு மெங்கும்
கட்டெழில் பங்தலதில் நிறையு மெங்கும்
பாண்டியl மணவினை நடத்து கென்றார்
பைந்தமிழ்ச் செல்விபணி செய்ய லுற்றான்
ஈண்டுமங் கலமொழிகள் தான்மொ ழிந்தான்
இன்பமிகு தமிழ்மறை ஓதி நின்றான்
தெய்வீகன் மணவறை ஏறி யுற்றான்
தேவியர் இருவோரும் அருக மர்ந்தார்
செய்தமிழ்ப் பாமாலை பலர் புனைந்தார்
சேர்ந்தவர் பல்லாண்டு வாழ்க என்றார்
மணமக்கள் மணமாலை மாற்று கென்றான்
மன்னவர் மலர்மாரி சொரிய லுற்றார்
இனமக்கள் எல்லோரும் வாழ்த்தி நின்றார்
இன்பமணம் இனிதாக நடந்தே றிற்று !
மூவரும் விருந்துண்டு செல்க என்றார்
முதலில் பனம்பழம் படைக்க என்றார்
நாவரசி ஔவையார் நல்கும் என்றார்
நற்றெய்வ வன்மையைக் காட்ட லுற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/37&oldid=1750143" இலிருந்து மீள்விக்கப்பட்டது