பக்கம்:ஔவையார் கதை.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஒளவையார் கதை


வசனம்

திருமண விருந்து அருந்திச் செல்லுமாறு வேண்டிய ஒளவையாரைநோக்கி, சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும், “எங்கட்கு உணவுடன் பனம்பழமும் படைத்தல் வேண்டும்,” என்றனர். அக்காலம் பழம் பழுக்கும் பருவ காலமில்லை. ஆயினும் ஒளவையார் அணுவளவும் திகைக்காமல், “அவ்விதமே படைக்கிறேன்” என்று சொன்னார். அவ்விடத்தில் பனைமரத்துண்டு ஒன்று கிடக்கக்கண்டார். அதனை எடுத்து நிலத்தில் நட்டார். பாடினார் ஒரு திருப்பாட்டு.

பாட்டு

“திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துகின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.”

வசனம்

என்று பாடினார். ஒளவையார் நிறைமொழி மாந்தர் ஆதலின், அப் பனந்துண்டம் வெண்குருத்துவிட்டு, ஓலை வளர்ந்து, காய் காய்த்துப், பழம் பழுத்து, மூன்று பழங்களைச் சொரிந்து நின்றது. திருமணத்திற்கு வந்திருந்த அரசர்களும் புலவர்களும் ஒளவையாரின் அரிய செயலைக் கண்டு வியந்து நின்றார்கள். தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் அவர் செயல் அச்சத்தையும் அதிசயத்தையும் ஒருங்கு விளைத்தன. எல்லோருக்கும் ஒளவையார் அருமையான விருந்தளித்தார். அவ்விருத்திற்குத் திருக்கோவலூரை அடுத்துச் செல்லும் பெண்ணையாறு பாலாகவும் நெய்யாகவும் பெருகி வருமாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/38&oldid=507927" இலிருந்து மீள்விக்கப்பட்டது