பக்கம்:ஔவையார் கதை.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஒளவையார் கதை


பாட்டு

"பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி ஆடையாம்
அந்நாள் வயலரிசி ஆகுமூர்—எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஒங்கு திருக்கோவ லூர்.”

வசனம்

என்பது ஒளவையார் அன்போடு வாழ்த்திய அமுத வாழ்த்து. ஒளவையாரின் அரிய வாழ்த்தைப்பெற்ற அரசனாகிய தெய்வீகன், தான் மணம் முடித்த தமிழ்ச்செல்வியராகிய பாரிமகளிருடன் பல்லாண்டு நல்லாண்டு இனிது வாழ்ந்தான்.

தெய்வப் பேராற்றல் படைத்த தீந்தமிழ் மூதாட்டியாகிய ஒளவையார் அவ்வப்போது தாம் செல்லும் இடமெல்லாம் மன்னவர்க்கும் மற்றவர்க்கும் மாபெரும் அறிவுரைகள் சொல்லியுள்ளார். அவையெல்லாம் அறிவுச் சுடர்மணிகள் ஒளிவீசும் ஞானச் சுரங்கம் ஆகும்.

பாட்டு

ஒளவை அற வுரையென்று கேட்பீர்
அவ்வழியில் செல்லவே பார்ப்பீர்
செவ்வைநெறி யதுகன்று கேட்பீர்
செய்யநலம் கண்டினிதே யார்ப்பீர்
காடுமலை சூழ்ந்தபாழ் நாடோ
காட்டாறு பாயுமொரு நாடோ
தேடரிய கூடுவள நாடோ
தீயமுட் செடிநிறைந்த காடோ
பள்ளத்தில் உள்ளதொரு நாடோ
பருமேட்டில் திகழுமொரு நாடோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/40&oldid=507929" இலிருந்து மீள்விக்கப்பட்டது