பக்கம்:ஔவையார் கதை.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

41


தள்ளரிய நல்லார்கள் வாழும்
தகைமிக்க நாடேபொன் னாடு
நன்மக்கள் வாழாத நாடு
நல்வளம் சூழ்ந்தநா டேனும்
என்னபயன் இன்பநா டாமோ
இன்மக்கள் வாழ்நாடே நாடு
இந்தவுரை செந்தமிழில் தந்தார்
இனியகவி யமுதத்தை யீந்தார்
நந்தமிழ் ஒளவையினைப் பெற்ற
நன்னாடிங் நாடுபொன் னாடே !

வசனம்

நிலம் எத்தகையதாக இருந்தாலும் அதில் வாழும் மக்களின் மனநிலையைப் பொறுத்தே பெருமையும் சிறுமையும் அமையும். இந்தக் கருத்தமைந்த ஒளவையின் அமுதவாக்கை நோக்குங்கள் !

பாட்டு

"நாடா கொன்றே ; காடா கொன்றே ;
அவலா கொன்றே : மிசையா கொன்றே :
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்ல வாழிய! நிலனே.”

வசனம்

இங்கனம் எண்ணற்ற அறவுரைகள் மண்ணுலகிற்குத் தந்தருளிய தமிழ் மூதாட்டியைப் போற்றாத புலவரில்லை! புகழாத மன்னரில்லை.

பாட்டு

ஒளவைக் கிழவி நம்கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/41&oldid=507930" இலிருந்து மீள்விக்கப்பட்டது