பக்கம்:ஔவையார் கதை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஔவையார் கதை


உலப்பில் ஆனந்தம் பொங்கும்நாடு
உத்தமக் கற்பினர் தங்கும்நாடு
சிலப்பதி காரம் பிறந்தநாடு
செந்தமிழ் காத்த சேரநாடு

வசனம்

மலையாள நாடாகிய பழைய சேரநாட்டிலே ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னாலே - கடைச்சங்க காலத்திலே, தக்கார் பலர் வாழ்ந்த தகடுர்த் திரு நகரிலே,

பாட்டு

பண்ணிசைத்து வாழ்ந்துவரும் பாணர்தம் பழங்குடியில்
எண்ணரிய கலைவல்ல யாளிதத்தன் என்பார்க்கு
வாழ்க்கைப் பெருந்துணையாய் வாய்த்தமனை யாளுடனே
வாழ்ந்த அறப்பயனுய் வந்ததொரு பெண்மகவு
பல்லாண்டு பிள்ளையின்றிப் பாரிலறம் செய்தவர்கள்
எல்லையிலா நல்லறங்கள் இயற்றிவரம் வேண்டியவர்
கலைகள் பல கற்றுணர்ந்த கற்றவராம் பெற்றியர்க்குக்
கலைமகளே நன்மகவாய்க் காசினியில் அவதரித்தாள்
குழந்தை பிறந்தவுடன் குளிர்ந்தமழை பெய்ததையா
பழங்கள் மரங்களெல்லாம் காய்த்தினிது பழுத்தவையா
செந்நெற் பயிர்களெல்லாம் செழிக்கோங்கி வளர்ந்தவையா
கன்னல் கதலியெல்லாம் விண்ணோங்கி வளர்ந்தவையா
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்நேர் பசுக்களெல்லாம்
பாங்கினர் வந்துகண்டார் ஒங்குவகை கொண்டுகின்றார்
தேவமகள் அவதரித்தாள் திருக்குழந்தை அருட்குழந்தை
ஆவியெனப் பேணிடுவீர் தேவியிவள் கலைவாணி
என்றினிது புகழ்ந்திட்டார் நன்றினிது மகிழ்ந்திட்டார்
அன்றுமுதல் பெற்றோர்கள் அகமகிழ்ந்து வாழ்ந்திட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/8&oldid=507898" இலிருந்து மீள்விக்கப்பட்டது