பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஔவையார் தனிப்பாடல்கள்



இங்ஙனம் எல்லாமே இருந்தும், நீர் ஏன் ஐயனே பலிக்குச் சென்று வருந்தினீர்? அதன் காரணத்தை அறிவீரோ? அது நும்மிடத்து இரந்து நிற்பவர்களுக்கு நீர் அவர் கேட்பதை வழங்காததனால் அல்லவோ ஏற்பட்டது!

பெருங்கோயில் இறையவனே! இனியேனும் இரந்து மனமுருகிப் பணியும் அடியவர்களுக்கு அருள் செய்யீரோ"

இவ்வாறு அமைகின்றது பாடல்.

மேற்பார்க்க மைந்தரும் மூவா எருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச்சலும் நன்னிலமும் உண்டாகியும் நின்னிடத்தில்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றாய்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோயில் இறையவனே!

“பயிரிடுதலை மேற்பார்க்க இரண்டு குமாரர்கள் உள்ளனர். உழவுக்கு என்றும் மூப்படையாத எருது உளது. நிலைபெற்று விளங்கும் கங்கை நீரின் பாய்ச்சலும் வாய்த்துள்ளது. நன்கு விளையும் நிலமும் உளது. இவை இருந்தும் நீர் உழுது விளைவித்து உண்டு மகிழாது. ஏனோ பலிக்குச் சென்று உழன்றீர்?

அதுதானில்லை! நும்மிடத்தில் பாற்பாக்கியவதி நீங்காது உள்ளனள். பாலருந்தியாவது வாழ்ந்திருக்கலாமே? நும்மிடத்தில் வந்து இரப்பவர்களுக்குக் கொடுத்துதவும் குணம் இல்லாததால் அன்றோ எல்லாம் இருந்தும் நீர் அப்படி இரந்து வருந்தினர்" என்பது பொருள்.

மைந்தர் - கணபதியும் குமரனும் மூவா எருது - நந்தீசர். கங்கை - சடையில் விளங்கும் கங்கை, நன்னிலம் - நன்னிலம் என்னும் ஊரைக் குறிக்கும்; புவனத்தையும் குறிக்கும். நின் இடத்தில் பால் பாக்கியவதி - நின் இடப்பாகத்தில் நின்னில் ஒரு பகுதியாக விளங்கும் புண்ணியவதியான உமையம்மை. பலி - பிச்சை ஏற்று உண்டல். இவற்றையும் பொருத்திப் பொருள் கண்டு இன்புறுக

73. கொடாத செல்வர்!

ளிவையார் மிக நல்ல பண்பினைக் கொண்டவர்.மக்களின் துயரங்களைக் கண்டால் அவர் மனம் உருகும். மக்களின் இன்பத்தைக் கண்டால் அவர் உள்ளம் உவக்கும். அன்பினுக்கு அவர் எளியவர். ஆனால், அதிகாரத்திற்கோ, அல்லது போலிச் செருக்கிற்கோ அவர் பணிபவர் அல்லர்.

ஒளவையாரின் இந்தப்பண்புகளை நாடெங்கணும் அறிந்தவர் பலர். அதனால், அவருக்கு ஏற்பட்டிருந்த புகழும் பெரிது!