பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

103



ஒட்டக்கூத்தரும் இந்த வடுகநாத முதலியாரின் சிறப்பைப் பாடியுள்ளனர்.

“செல்வத்தை இறுக முடிந்துகொண்டு இருப்பார்கள். தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு யாதும் கொடுக்கமாட்டார்கள். இத்தகைய பணப்பித்தரை நீ சென்று கொல்லக் கூடாதோ?”

வடுகன் சிறிய பருவத்தான். அதன் தம்பி வரதன் பேதைமை கொண்டவன். அவர்களைப் போய்க் கொன்றாயே? எமனே! இதுதான் நீ நடுநிலைமையோடு நடப்பதோ?

எமன் நடுநிலை தவறிவிட்டான். உலகிற்குப் பாரமாக இருக்கிறவர்களைக் கொல்லலாம். அவர்களை வாழ்ந்திருக்க விட்டுவிட்டு, உலகிற்கு உபகாரமாக இருப்பவர்களைக் கொன்று விட்டானே? இது, எமன் நீதியின் தேவன் என்ற வார்த்தையைப் பொய்ப்படுத்தியது ஆகுமே? இப்படி வருந்துகிறார் ஒளவையார்.

இறுக முடிந்தே இரப்பார்க்கொன் றீயாத்
தறுகணரைக் கொல்லத் தகாதோ - சிறுகை
வடுகனையும் பேதை வரதனையும் கொன்றாய்
நடுவாமோ வீது நமா?

“நமா! பணத்தை இரப்பவர்க்கு ஒன்றும் கொடாமல் இறுக முடிந்து வாழும் கொடியவர்களைக் கொல்லுதல் கூடாதோ? சிறு கையனான வடுகனையும் பேதையான வரதனையும் கொன்றாயே? இது நினக்கு நடுவாமோ” என்பது பொருள்.

'சிறு கை' பருவத்தை குறித்தது பேதை இயல்பைக் குறித்தது. செங்கலங்கை வடுகநாத முதலியாரும் அவர் இளவலும் ஒருங்கே மாண்டபோது பாடியது இதுவென்பார் சிலர்.

76. நுண் பொருள்!

னக்கண்ணால் காண முடியாத பொருள்கள் நுண் பொருள்கள் எனப்படுவன. இது, மேற்போக்காகக் கற்பார்க்குப் புலனாகாது, நுணுகி உணர்வார்க்கே புலனாகும். செறிந்த சொற்பொருளையும் உணர்த்தும்.

இப்படியே வாழ்வியற் கூறுபாடுகளில் மிகவும் முயற்சியுடன் அடைந்து அனுபவிக்கும் தன்மைத்தான பொருள்களையும் நுண்பொருள் என்பார்கள்.

பெண் ஓர் ஆடவனை மணந்ததும் அவனுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றாள். அவனோடு கூடிக் கலந்து கொஞ்சி இன்ப நலத்தைப் பெருக்குகின்றாள்; பெறுகின்றாள். அவன்