பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

105



77. குறிப்பு விளக்கம்!

ட்டக்கூத்தர் குலோத்துங்க சோழனுடைய அவையில் சிறப்புடன் திகழ்ந்தவர். அரசனுக்கு மிக வேண்டியவராகவும், 'கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழன்’ என, அவனே போற்றுமாறு அவனுடைய குருநாதராகவும், அமைச்சராகவும் வாழ்ந்தவர் அவர்.

பெருமையும் சிறப்பும் பேரளவிற்குப் பெருகியதாயினும், புலமையின் நிறைவு குடிகொண்டதாயினும், அரசனிடத்தேயுள்ள தம்முடைய அளவிறந்த செல்வாக்கின் காரணமாகக் கூத்தர் சிலபோது செருக்குடையராகவும் விளங்கினார்.

இவருடைய இந்த ஒரே ஒரு குறையின் காரணமாக, இவருக்கும் புகழேந்தி, கம்பர் முதலியோருக்கும் நிகழ்ந்த வாக்குவாதங்கள் மிகப் பலவாகும். இவற்றைத் தனிப் பாடல்கள் பலவும் எடுத்துரைக்கின்றன.

ஒரு சமயம் ஒளவையார், கூத்தரின் செருக்கினைக் கண்டதும் ஆத்திரங்கொண்டார். அவரைத் தலைகவிழச் செய்வதற்கும் முடிவு செய்தார். அவையின்கண் கூத்தரை விளித்துச் சில முத்திரைகளைத் தம் கைகளால் காட்டி, 'இவை குறிக்கும் மெய்ப்பொருள்கள் யாவோ?’ என்று வினவினார். அப்போது கூத்தர் பாடியது இச் செய்யுள்.

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற விளமுலையாள் - இவ்வளவாய்
நைந்த உடலாள் நலமேவ மன்மதன்றன்
ஐந்துகணை யால்வாடி னாள்.

“இவ்வளவு என்னும்படி சிறுத்த கண்களை உடையவள், இவ்வளவு என்னும்படியான சிறுத்த இடையினை உடையவள், இவ்வளவு என்னும்படி பருத்த இளைய முலைகளை உடையவள்; நின்மேற்கொண்ட காமத்தால், தான் நைந்த உடலினளாகி, நின்னால் நலத்தை அடையும்படிக்கு ஏங்கி, மன்மதனுடைய பஞ்சபாணங்களால் வாடிப் போயினாள்; அவளுக்கு உதவாயா?" என்பது பொருள்.

ஒட்டக்கூத்தரின் இந்தச் செய்யுள் மிகவும் நயமானதுதான் என்றாலும், அதன்கண் ஒரு பெரிய குறைபாடும் இருந்தது தாம் குறித்த அடையாளங்களைக் கொண்டு அவை விளக்கும் மெய்ப்பொருள்களைப் புலப்படுத்திப் பாடுமாறு கேட்டிருந்தனர் ஒளவையார்.