பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

125



"கடைவாயிலில் மணியோசை ஓயாது எழுந்து கொண்டிருக்கும், வள்ளல் தன்மையினை உடையவன் ஜவேல் அசதி என்பவன். அவனுடைய அழகான மலைப்பகுதியினிடத்தே...

நீண்ட கயல்மீனைப் போன்ற கண்களையுடையவளான இவள் எனக்குத் தந்த ஆசையின் பெருக்கத்தினை, என்னால் எடுத்துச் சொல்வதும் அரிதாகும்.

மலையுச்சிகளும், குளமும், குளத்து அருகே நிற்கும் குன்றுகளும், காடும், செடியும் ஆகிய அனைத்துமே என் கண்களுக்கு அவளாகத் தோன்றுமே!"

என்கிறான் அவன். காண்பவை அனைத்திலுமே அவளைக் காணுகின்ற அரிய காதற்செல்வன் அவன்!

ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமேல்
நீடுங் கயற்கண்ணி டந்த வாசை நிகழ்த்தரிதால்
கோடுங் குளமும் குளத்தரு கேநிற்கும் குன்றுகளும்
காடுஞ் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.

'கடைமணி ஆடல் வருகின்ற விருந்தினர் பற்றிய அறிவிப்பு. கயல் - கெண்டை மீன்.

101. சுற்றத்தாரின் இயல்பு!

வையார், ஒரு சமயம் ஒரு சத்திரத்தில் இளைப்பாறும் பொருட்டாக அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய உள்ளம் உலகத்தின் பல்வகைப் போக்குகளையும் எண்ணி, ஒரு நன்னெறியைப் பேணி மேற்கொள்ளாது சிதறிக் கிடக்கும். தன்மையினை நினைந்து வருத்தமுற்றதாக இருந்தது. எதிரே சற்று நோக்கினார். அங்கே கோலூன்றிக் கொண்டே முடவன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். தள்ளாடிச் சோர்ந்து மெலிவுற்று நலிந்து வந்து சேர்ந்த அவனை ஒளவையார் கூர்ந்து நோக்கினார். அவனை அதற்கு முன்பு எங்கோ கண்டிருக்கின்றார். அவன் முகம் அவருக்குப் பழக்கமானது. அவர் மனம் பழைய நினைவுகளில் சென்றது. அவனைப் பற்றிய ஆராய்வில் அவர் ஈடுபட்டார்.

அவரை நெருங்கி வந்துவிட்ட அவன், அவரை மிகவும் அன்புடன், 'தாயே! என்னை உங்கட்கு நினைவிருக்கிறதா? நீங்கள் நலந்தானா? எங்கிருந்து வருகின்றீர்கள்?’ என வினவினான்.

நின்னைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஆமாம்! நின்னைப் புரிந்துகொண்டேன். உனக்கு ஏனப்பா இந்த நிலை? என்றார் ஒளவையார்.