பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

135


அவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகள்! அவ்வளவு செவ்வையான அமைப்பு! அந்தக் காலின் மதிப்பை ஈடு சொல்வதானால், ஒரு நாளைக்கு எட்டுத்தேர் செய்பவன் ஒரு திங்களாகச் செய்தது என்பதை மனத்துட்கொண்டு, 210 தேர்க்கால்களின் மதிப்புக்குச் சமமென்றுதானே நாம் சொல்லல் வேண்டும்.

அந்தத் தேர்க்காலைப் போன்ற சிறப்புடன் விளங்கும் போர் மறவன் ஒருவன் எம்மிடமும் இருக்கின்றான். அவன் நுட்பமான போராற்றலையும் உடையவன்.

அதனால் அவனுக்குப் பகைவரான நீங்கள், அவனுடனே போரிடற்கு எதிரிட்டவராகப் போர்க்களத்திற்குச் செல்ல நினைப்பதைக் கைவிடுவீராக. மீறிச் சென்றால் அழிவு உமக்கே என்பதையும் அறிவீராக”

ஒளவையாரின் பேச்சைக் கேட்ட அவர்களின் முகம் நாணத்தால் இருண்டது. அவர்கள், தம்முடைய சதியை அறிந்து கொண்ட ஒளவையாரின் சொற்களைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். சிந்தனையில் மூழ்கிய அவர்கள், எதுவும் வேண்டாமென்ற ஒரு முடிவுக்கே வந்துவிட்டனர். அதற்குள் ஒளவையாரும், அவ்விடத்தைவிட்டு வெளியேறிவராகத் தம் பயணத்தை தொடர்ந்தார்.

களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.

என்பது அந்தப் புறநானூற்றுச் செய்யுள்.

109. நெல்லித் தீங்கனி!

தியமான் தமிழார்வத்தோடு, தமிழ் மருத்துவ முறைகளுட் பலவற்றை அறிந்தவனாகவும் இருந்தான். அவனுடைய தகடூர் மலைச்சாரலும், அந் நாளிலே வளமுடனும் செறிவுடனும் திகழ்ந்தது.

அந்த மலைச்சாரலிலே, ஒரு பாறைப் பிளப்பின் உச்சியிலே, ஒரு கருநெல்லி மரம் இருந்தது. அதனை, ஒருநாள் மலைவளம் காணக் கருதிச்சென்ற அதியன் கண்டுவிட்டான். அவன் உள்ளத்திலே அளவற்ற மகிழ்ச்சி பிறந்தது.

காடு காவலரை அதியன் அழைத்தான். “இந்தக் கருநெல்லி மரத்தை நன்றாகப் பேணி வாருங்கள். இதனுடைய கனி மிகவும் சிறப்பானது.பல ஆண்டுகட்கு ஒருமுறைதான் இம்மரம் காய்ப்பது