பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

139


பட்டிருந்தவராகையால், மிகவும் நம்பிக்கையுடனேயே அவனிடம் சென்றார்.

ஒளவையாரைக் கண்டதும், நாஞ்சிற் பொருநன்அளவுகடந்த மகிழ்ச்சியினன் ஆனான். “அம்மையே! தங்களை வரவேற்க இந் நாடு பெரிதும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தாங்கள் என் விருந்தினராகச் சில நாட்களாவது தங்கிச் செல்லுதல் வேண்டும்” என வேண்டினான்.

அவனுடைய தமிழன்பைக் கண்டு பெரிதும் உவந்த ஒளவையார், “அரசே முதற்கண் சிறிது அரிசி தருவதற்கு ஏற்பாடு செய்க. யாங்கள் பசியாற வேண்டும்” என்றார்.

ஒளவையாரின் வேண்டுதலைக் கேட்ட பொருநன் சிரித்தான். அவன் கண்ணோட்டம் எதிரே நின்ற ஒரு பணியாளன் மேற் சென்றது. அவன் அருகே வந்து நிற்க, அரசனும், அவனுடைய காதோடு ஏதோ சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.

வேண்டுவன வேலையாட்கள் செய்தனர். ஒளவையாருடன் உரையாடி இனிய தமிழமுதத்தை நுகர்ந்தபடியே, வள்ளுவனும் வெளியே வந்தான். "இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.

ஒளவையார் திகைத்தார். அவர் எதிரே ஒரு வலிய களிற்றியானை நின்றது.

“பொருநியான் நின்னை நாடிச் சிறிது அரிசி பெற்றுச் செல்வதற்காகவே வந்தேன், நீயோ குன்றைப்போன்ற இக் களிற்றினை நல்குகின்றனை. இதற்கு எப்படியான் உணவளிப்பது" என்றார். -

"அவற்றுக்கு வேண்டியனவும் இதோ பெற்றுக் கொள்க" என்று, அளவற்ற பொற்காசுகளை வழங்கி உபசரித்தான் நாஞ்சிலான். “தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அரிசியும் முன்பாகவே அனுப்பப் பெற்றிருக்கிறது" என்றும் கூறினான்.

வியப்பும், நாஞ்சிலானின் பெருந்தன்மையைக் கண்டு இறும்பூதும் மேலெழ, ஒளவையார் உளங்கசிந்து பாடுதற்குத் தொடங்கினார். அந்தச் செய்யுள் இது.

'வானைத் தடவும் அளவுக்கு உயர்ந்திருக்கின்ற பலா மரங்களையுடைய நாஞ்சில் நாட்டின் தலைவனாகிய இவன் மடமையினை உடையவன் போலும் செவ்விய நாவினையுடை யீரான புலவர்களே! வளையணிந்த கையினரான விறலியர்கள் : தோட்டக் காட்டிலே கொய்த கீரைகளின் மேல் இட்டுச் சமைப்பதற்குச் சிறிது அரிசியினை வேண்டியே யாம் இவனை அடைந்தோம்.