பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஔவையார் தனிப்பாடல்கள்



உரிமையுடன் தம் ஈர உடையை மாற்றி, அந்தச் சிறு பெண்கள், அவர்களுடைய நீலச் சிற்றாடையைத் தமக்கு அணிவித்த செயலை எண்ணினார். காரியைக் காட்டினும், இவர்களின் உரிமைப் பாசம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

சேரமான் ஒளவையாரின்மீது அளவற்ற அன்புடையவன். ஒரு சமயம் அவரை அழைக்க நினைத்த அவன், அவரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பதைக்கூட மறந்துவிட்டான். 'ஒளவையே! வாராய்?' என்று உரிமையுடன் அழைத்தான். அந்த அன்புக் கலப்பும் அவரிடம் நிலைபெற்றிருந்தது.

அதனினும் உரிமையுடன் தம்மைப் "பாட்டி!உடையை மாற்று! நனைந்து விட்டாயே?’ என்றெல்லாம் ஏகவசனத்தில் அழைத்து, வலிந்து தமக்கு நலம் செய்த அந்தப் பெண்களின் செயல் அவரைப் பெரிதும் கவர்ந்தது. அவர் பாடினார் :

பறித்த பறியும் பழையனுர்க்
காரிஅன் றீந்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயோ என்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.

"அந்நாளிலே பாரியானவன் வழிப்பறி செய்துபோன அந்தக் கொள்ளைச் செயலும், பழையனூர்க் காரி என்பவன் கையிலே களைக்கொட்டினைக் கொடுத்த அந்தச் செயலும், சேரமான் வாராய் என்று அழைத்த உண்மையான உரிமையும் ஆகிய இவை மூன்றும், இந்தப் பெண்கள் அளித்த நீலச் சிற்றாடைக்குச் சமமான அன்புச் செயலாகும்” என்பது பொருள்.

ஒளவையார் மிகவும் முதியவர்; நீலச் சிற்றாடை உடுத்தற்குரிய பருவத்தை எப்போதோ கடந்தவர்; எனினும் அப்பெண்கள் தம்மிடம் உள்ளதை அன்புடன் வழங்கினர். அன்பின் மிகுதியால் செய்வதன் தன்மையினையும் மறந்து மடம்பட்ட அவர்களின் தன்மையினைக்கூறி வியந்தது இது.

20. கடகஞ் செறியாதோ?

ழைக்குப் புகலிடம் தந்தனர்.உடையை மாற்றி ஈர உடையை உலர்த்தவும் செய்தனர். அத்துடனும் அந்தப் பெண்கள் நிற்கவில்லை.

ஒளவையாரின் பசியையும் போக்குவதற்கு முனைந்து, விரைவிலே உணவும் சமைத்தனர். அவரை உபசரித்து உண்ணவும் அழைத்தனர்.

அவரும் அமர்ந்து சூடான அந்த உணவினை உண்டு பசி தீர்ந்தார். இட்டது கீரைக்கறியும் சோறுந்தான். எனினும் அன்பின்