பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

61



ஒளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலுகோடிக் கவி பாடுவதாகத் தெரிவித்தார். பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்து கூடிவிட்டது.

போலி வள்ளல் திகைத்தான். ஒளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், 'எவ்வளவு காலம் ஆகும்? அதுவரை அவர் எப்படிப் பாடுவார்? அதையும்தான் பார்ப்போமே' என்று கருதி இசைந்தான்.

புலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார்:

"இது நாலு கோடி கவி அன்று” என்றான் அவன். நாலு கோடிக் கவிதான் என்று அந்த அவை கூறிற்று. அவன் மிக வருத்தத்துடன் ஆயிரம் பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத் தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்;
கோடனுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

"தம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் பொருளாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிப் பொன் பெற்றதைப் போன்றதாம். 'உண்ணீர் உண்ணீர்' என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும் கோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு கூடியிருப்பது கோடி பெறுவதாகும். எத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவானது கோணாதிருக்கும் தன்மையும் கோடிப் பொன் பெறுவதாகும்” என்பது பொருள்.

‘என் றூட்டாதார்’ என்பதும் பாடம். 'கோடியுறும்’ என்பதும் பாடம்.

42. இல்லை இனிது!

ழையனூரில் காரி என்ற பெயருள்ளவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் எளியவன். ஆனால், மிகவும் நல்ல குணம் உடையவன். அவனுக்கு உதவ நினைத்தார் ஒளவையார். வாதவன்