பக்கம்:கங்கா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

கங்கா


நான் அவளைக் கண்டதால் பிடுங்கிய வெட்கமோ ? அல்ல, என்னைக் கண்டதும் அவள் விழிகளில் கண்ணிர் சரசரவென நிறைந்து தளும்பிற்று. இருவருக்கும் ஒரே சமயத்தில் வாய் மூடிமுடித் திறந்ததேயொழிய, வாய டைத்துவிட்டது. அவள் குனிந்தபடி விருக்கென நடந்து சென்றுவிட்டாள். நான் நின்றவிடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். என் ஊனத்தோள் துடித்தது. அது என்ன பேச முயன்றது ? அப்புறம் அவளை நான் உயிருடன் பார்க்கவில்லை. வேளை இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்கையில் கிணற்றடியில் வழுக்கிவிழுந்துவிட்டாள். படாத இடத்தில் பட்டு அப்புறம் நினைவுகூட இல்லை. ஏக அமர்க்கலாம். குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அதென்னவோ சம்பிரதாயப்படி வயிற்றைக் கிழித்து எடுத்தார்கள். பினத்தை எடுத்துச் செல்லுமுன் அதன் உயிரற்ற உடலை ஒரு முறை தொட்டுப் பார்த்தேன். குழந்தையாகவா இருந்தது? கடோத்கஜன் மாதிரி இருந்தது. கருப் பையைக் கூட மீறிய உடல் பருமன் பிள்ளை. பினத்தை எடுத்த பிறகுதான் அவள் கணவன் வந்து சேர்ந்தான். அன்று மாலை நாங்கள் இருவரும் குளத்தின் படிக்கட்டில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவளைப் பற்றியும் அத்தனை ஏழ்மையில் அவளுடன் அவன் நடத்திய இன்ப வாழ்க்கையைப் பற்றியும் அவன் பேசு கையில் எங்களை இணைப்பதாக நான்உணர்ந்த உறவே அலாதி. என் குழந்தையைப் பெற்றவள் அவள். என் குழந்தைக்குத் தந்தையாய் இருப்பவன் அவன்..." அவன் பெருமூச்செறிந்தான். "இப்பொழுது தோன்றுகிறது. என் அளவு கடந்த ஆசைப்பசியே அவளை விழுங்கிவிட்டது என்று நினைக் கிறேன். இதிலிருந்து எதை நான் உங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/110&oldid=1283321" இலிருந்து மீள்விக்கப்பட்டது