பக்கம்:கங்கா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

97


நிரூபித்தேன் அல்லது நிரூபிக்க முயன்றேன் என்று எனக் குப் புரியவில்லை. உள்ளத்தின் மூலம் உடலை வெற்றி கொண்டேனா ? அல்லது உடலின் மூலமே உள்ளத்தின் தாபத்தைத் தணித்துக் கொண்டேனா ? மொத்தத்தில் இந்த வெற்றி தோல்வி என்னும் இரண்டு வார்த்தை களுமே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டும் இரண்டு முற்றுப் புள்ளிகள். அம்மாதிரி முற்றுப் புள்ளிகள்தான் வாழ்க்கையா? என்னவோ பேச்சு எங்கேயோ ஆரம்பித்து எப்படியோ முடிந்தது. மழையும் நின்றுவிட்டது. நான் ரயிலடிக்குப் போகிறேன். நீங்கள் ரயிலடியிலிருந்துதான் வருகிறீர்களாக்கும் சரி நமஸ்காரம்-" எனக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. அன்றிரவு அவளுக்கு எழுதினேன். "இன்று வரை நான் என்னுடைய நானை'ப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்துவிட்டேன். உனக்கும் ஒரு "நான்’ உண்டு என்பதை எண்ணவில்லை. நம்மிருவருக்கும் சேர்ந்த ஒரு நாம் உண்டு என்பதையும் எண்ணவில்லை. அந் நாமி’ற்கே ஒரு "நான் உண்டு, அந் நானி’ விருந்து இப்பொழுது பிறக்கப் போகும் நானைப் பற்றி யும் எண்ணவில்லை. நாமே தான் நான்; நானேதான் நாம்-"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/111&oldid=1283322" இலிருந்து மீள்விக்கப்பட்டது