பக்கம்:கங்கா.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔雷。母。扩伊。 - 9ழ் விட்டான். பழைய நினைவுகளுள் அழுந்திக் கொண்டிருக் கையிலேயே வெளியரவங்களின் ஊமைச் சப்தங்கள் மேல் மோதின. தெருவில் பையன்களின் ஆரவாரம், கீழே குடித்தனக் காரர் வீட்டில் ரேடியோவின் தும்மலும் இருமலும் வாந்தி யும் கனைப்பும். குழந்தைகள் ஏற்றும் மத்தாப்புகளின் திடீர் திடீர்ச் சீறல். குடித்தனக்கார மாமி அயசுரமான கட்டைக் குரலில் பாடுகிறாள். “கெளரி கல்யாணம் - வைபோ - ஓ - ஒகமே !-” பாட்டோடு பாட்டாய், "நீங்களும் தேச்சுண்டு டுங்களேன் விடிஞ்சா அமாவாசை !” என்று புருஷனைக் கூப்பிட்டுப் பார்க்கிறாள். அரவங்கள் அவன்மேல் கூடுகட்டிக் கொண்டிருக்கை யிலேயே கட்டிலில் படுத்தபடி அவன் வருடங்களைக் கடந்து கொண்டிருந்தான். பின்னேர்க்கி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. மாமனார் வீட்டுக்குப் போய் இந்தத் தீபாவளியோடு ஐந்து வருடங்களாகிவிட்டன. கெளரி ஐந்து உடன் பிறந்தவர்களுக்கிடையில் ஒரே பெண். செல்வக்குமாரி. முதல் பிறப்பு. ஆகையால் தலை தீபாவளி மட்டுமல்லாமல் மற்றைய தீபாவளிகளுக்கும் அவள் வீட்டிலிருந்து அவளுக்கும் அவனுக்கும் வலுக்கட் டாயமான அழைப்பு வரும். ஒவ்வொரு தீபாவளியும் தலை தீபாவளி மாதிரித்தான். ஆனால் கலியாணமாகி கடைசியாய்ச் சென்ற அந்த மூன்றாவது தீபாவளிக்குப் பிறகு அவனும் மாமனார் வீட்டுக்குப் போகவில்லை. அவளும் பிறந்த வீடு எட்டிப் பார்க்கவில்லை. இப்பொழுது அவன் வருஷங்களைக் கடந்துவிட்டு அந்த மூன்றாவது தீபாவளிக்கு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/113&oldid=764286" இலிருந்து மீள்விக்கப்பட்டது