பக்கம்:கங்கா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●)躍す。 F。 『T。 $03 அவன் கோபிக்கவில்லை. ஒருக்காலும் அவன் அவளைக் கடிந்ததில்லை. அவள் கோபத்தின் வேடிக்கை யைத் தனக்கே அனுபவிக்கும் மோனச் சிரிப்பில் அவன் கண்கள் அவளைச் சிந்தித்தன; அம்மாதிரி நிலையில் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் அவள் திகைத் தாள். அச்சமயங்களில் யாவிலும் பரவிநிற்கும் பரம் பொருளின் தன்மையை அவன் தாங்கியிருந்தது போல் அவளுக்குத் தோன்றும். இப்படி ஆயிர மூர்த்திகள் அவ னில் இருப்பின் அவற்றுள் அவளுடைய மூர்த்தி எது? அதை அவள் அட்ைந்து தன்க்கென்றே இருத்திக் கொள்வது எப்படி? போகப்போக இடத்தைக் கெர்டுத் துக்கொண்டே எட்ட எட்டப் போவது தெரியாவிடினும், அவைகளின் ஊமை உறுத்தல் தாங்கக்கூடியதாயில்லை. தன் சீற்றத்தின் காரணம் தனக்கே தெரியாமல் அதன் வேதனையை மாத்திரம் பட்டுக்கொண்டு, கையை நெறித்தபடி அவள் நிற்கையில், கெளரியின் அழகு ப்ரமிக்கத்தக்கதாய்த் தான் இருந்தது. அதை அறிந்து தானோ என்னவோ அவளைச் சீண்டுதற்கென்றே அச் சிண்டலில் அவள் அழகைத் தூண்டுவதற்கென்றே, அவன் உதட்டில் கட்டிய அரும்பு கலையாமல், அவன் கண்கள் அவள்மேல் சிந்தனையில் ஆழ்ந்தன. 安 ★ ★ அந்தத் தீபாவளியைக் கெளரி மறக்கவே முடியாது. ஸ்நானம் பண்ணிவிட்டு, பளிரடிக்கும் வெண்ணெற்றியில் சந்தனப் பொட்டு அதனுள் நெற்றிக் கண்ணெனக் குங்குமம் துலங்க, கர்ணன் குண்டலங்களுடன் பிறந்தாற் போல் உடலோடிழைந்த புதுமஞ்சள் பட்டு ஜிப்பா, சரிகை வேட்டியுமாய், மாடியறையினின்று அவன் வெளிப்படுகையில் அவள் கீழே மாடிப்படி அடியில் நின்று கொண்டிருந்தவள், கைக்காரியத்தை மறந்து அவனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/117&oldid=764290" இலிருந்து மீள்விக்கப்பட்டது