பக்கம்:கங்கா.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கங்கr தன்னையிழந்து நின்றாள். அவன் தன்னுள் பதுக்கிய, எல்லையற்ற சக்திகளுள் இப்படித் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதும் ஒன்றா ? வேளைக்கு வேளை சட்டையுரிப்பு. கலியாணமாகி மூன்று வருடங்களாகியும். எப்படி இன்னும் இந்தப் புது மெருகு இவர்மேல் இப்படி கமழ்கிறது ? கலியாணத்திற்குப்பின் அவளுக்கு, உடல் குழைந்துவிட்டதாக அவள் பிறந்த வீட்டிலேயே சொல்கிறார்கள். ஆனால் இவர் மாத்திரம் என்றும் புது மெருகு அழியாமல் மார்க்கண்டனாய்த் தானிருப்பாரா? அவனைப் பார்க்கையில் ஒரு பக்கம் பெருமிதம் பொங்கிற்று. ஆனால் ஓர் அச்சமும் அவ்வுவகையைச் சூழ்ந்தது. அவன் மேல் நிலைத்த பார்வையைக் கலைக்க இயலாது, அவனின்று பறந்த அவன் உள் ஒளியில் கண் கூசி, கதவின் மேல் சாய்ந்தாள். சர்க்கஸ் புலி நெருப்பு வளையங்களுள் நுழைந்து வருவதுபோல் புன்னகை புரிந்தபடி படிகளின் வழியிறங்கி வந்தான். - "அத்திம்பேர் ! அத்திம்பேர் !” அந்த அவசர விளிப்பு அவளை மூர்ச்சையினின்று: விடுவித்தது. திடுக்கிட்டுக் குரல் வந்த திக்கில் திரும் 5馆鄞“敛r。 மாது வாசற்குறட்டில் ஒரு வாணத்தை வைத்துக் கொண்டு செத்துப்போனதை உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருந்தான். அவன் கண்களில் ஏமாற்றக்கண்ணிர் துளும்பிற்று. "ஏமாத்திட்டான் அத்திம்பேர் 1” ஆத்திம்பேர் சாவதானமாக அவனிடம் சென்றார். அவள் பார்வை விடாது தொடர்ந்தது. சிரித்துக் கொண்டே வாணத்தை இடறினார். பிரயோஜனமில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/118&oldid=764291" இலிருந்து மீள்விக்கப்பட்டது