பக்கம்:கங்கா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

கங்கா


தர்களையும் புதியவர்களையும் வீட்டுக்குள் அழைத்துப் போய் அதன் நாலு அறைகளையும் மொட்டை மாடியையும் சுற்றிச் சுற்றி வந்து, "இதோ பாருங்கோ சமையலுள்ளில் தனிக்குழாய், வெந்நீருள்ளில் தனிக் குழாய், இந்தச் சாரியிலே ஒரு சின்னக் குடித்தனமும் வெச்சிருக்கேன். ஆம்படையான் பெண்டாட்டி, வீடில்லாத், திண்டாட்டத்திலே வ்ந்து கேட்டா என்ன சார் பண்றது? மாட்டேன்னு சொல்ல வாய் வரமாட்டேன்கறது” என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும்போதும் பெருமையாய்த்தானிருந்தது. ஆனால் இந்தக் கெளர வத்தில் ஒரு பெரிய ஒட்டையும் விழுந்திருந்தது. வீட்டைக் கட்டி முடிக்கு முன்னாலேயே கடன் சுமையா யிறங்கிற்று. அப்புறம் மனைவி படுத்தும் வேதனை தாங். காது, மாடிமேலும் கட்டடம் எழுப்பினார். அதற்குமேல் எழுந்து கொக்கரித்து சதிராடும் கடன் அசுரனை உணரு கையில் பீதிதான் விளைந்தது, ஆனால் அம்மாவுக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. பக்கத்து வீட்டுக் காரன் தெருவை அடைத்துப் பந்தல் போட்டதால், “அதற்குக் குறையாமல் நம் வீட்டுக் கலியாணமும் நடந் தால்தான் அந்தாத்து மாமியை நான் தலை நிமிர்ந்து பார்க்க முடியும்” என்று அவள் பண்ணிய அட்டகாசத் திற்கு இணங்கி கெளரி கலியாணமும் சிறப்பாகக் கொண்டாடிய பின்னர், இன்னமும் ஒரு சுள்ளி வைத் தால் முதுகு முறியும் கடன் பளுவடியில் அப்பா அழுந்தி ஆயிற்று. ஆனால் அதைப்பற்றி கெளரிக்கு என்ன கவலை ? என்ன தெரியும்? அவள் வளர்ந்த முறையே கஷ்டப் படுவது புருஷர்கள் பங்கு, சுகப்படுவது நம் கடமை என்று கடன் பட்டாவது ஊர் மெச்சப் பால் குடிப்பது தான் குடும்ப கெளரவம் என்ற முறையில் வாழ்க்கை நோக்கு அவளுக்கு அவள் வளர்ந்த முறையில் அமைந்தது. கெளரியின் தாயார் தேடிய திட்டத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/122&oldid=1283328" இலிருந்து மீள்விக்கப்பட்டது