பக்கம்:கங்கா.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

கங்கா


தீயில் தான் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனையின் விபரீதம் ஓடும். அவள் சிலையாகச் சமைந்து அவனையே வெறித்த பார்வை நிலை மாறாது நின்றாள். அவன் ஆபீஸே திரண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தது. அவனுக்கு சுயநினைவில்லாததால் அவனுடைய முதலாளி அவளிடம் வந்தார். "பணக்கவலை, வேலைக்கவலை எதுவும் நீங்கள் படவேண்டாம். மாதா மாதம் ஆஸ்பத்திரி பில்லை ஆபீஸ் க்கு அனுப்பித்து விடணும். ஐந்து வருட மானாலும், அவருடைய நாற்காலி மேஜை அவருக்கே காத்திருக்கும்.” இன்னும் இதே ரீதியில் ஏதேதோ தைரியம் சொன்னார். அவர் பேச்சை அவள் க்ரஹறித்துக் கொண்டாளோ ? அறியாள். ஆனால் ஒரு தோற்றம் நெஞ்சில் பதிந்தது. ஆபீஸில் அத்தனைபேர் வேலை செய்ய, அவர்கள் நடுவே இன்னமும் வருஷம், ஒன்றோ இரண்டோ, எத்தனை காலமோ, அல்லது காலத்திற்குமோ, காலியாய் ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் கண்ணெதிரில் எழுகையில், தன்மேல் விழுந்து கொண்டிருப்பதாக அவன் அலறும் எரி நீர்வீழ்ச்சியிலிருந்து ஒரு வாளி, கண்ணுக்கு தெரியாக் கைகள் எடுத்து அவள் மேலும் வீசியதுபோல் அடிவயிற் றிலிருந்து அனல் கிளம்பிற்று. அதன் ஜ்வாலையில் அவள் எரிந்தாள். மருண்ட கண்கள் அப்படியே தாழ்ந்து கழுத்தங்குழியெலும்பின் மேல் சாதுவாய் உறங்கும் மஞ்சள் சர்டைப் பார்த்து பயங்கரத்தில் புருவங்கள் சுளித்தன. அது தன்னைக் கடிப்பதற்காகக் கழுத்தைச் சுற்றிக் கொண்ட பாம்பா, அல்ல தன் வாழ்வின் ரகூைடியா ? அந்த உள் பயத்திற்கு ஏற்ப, அவன் உடல்நிலையில் எதிர்பாராக் கோளாறுகள் புகுந்தன. ஊன், மாமிசம் முதற் கொண்டு வெந்து போனதால் மூன்று முறை புது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/128&oldid=1283331" இலிருந்து மீள்விக்கப்பட்டது