பக்கம்:கங்கா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

117


பயங்கரம், பொறியில் எலிபோல் உடல் பூரா வெடவெட வென உதறிற்று. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஊர்ந்துசென்றது. ஏனென்று அவளுக்கே தெரியவில்லை. அவளுக்கு அவள் தாய்வீட்டுக்குப் போக்குவரத்துப் படிப்படியாய் குறைந்து போய் அறுந்தும் போயிற்று. அவளுக்கு அங்கு போகவே பிடிக்கவில்லை. திரும்பத் திரும்பதன்னை "ஐயோ கெளரி! என்னடி இப்படி ஆயிடுத்தேடி " என்று உபசாரம் கேட்க வருபவர்களைக் கண்டாலே கரிப்பெடுத்துவிட்டது. பயமெடுத்துவிட்டது. "என்னடி இப்படி பண்ணிட்டை யேடி என்பதைத் திருப்பித்தான் அவர்கள் அப்படி கேட் டார்கள் போல் தோன்றிற்று. ஏனென்று புரியாமலே அவளுக்குத் தன் தாய்மேல் திடீரென்று வெறுப்புத் தட்டிற்று. ஏதோ ஒரு முறையில் இதற்கெல்லாம் தன் தாய்தான் காரணம் என்று தோன் றிற்று. தனக்கு அப்படித் தோன்றுவதன் நியாய அநியாயம் தோன்றினாலும் தோன்றாவிட்டாலும் ஏதோ ஒருவிதத்தில்- தனக்கு அது எப்படி என்று புரியாவிட் டாலும் போகட்டும்- தன் அடிப்படையில், தனக்குத் தோன்றியதுதான் சரி என்று பட்டது. தனக்குத் தானே இட்டுக்கொண்ட சிறையின் இரும்பு கிராதிகளின் வழி யாகத் தன் கணவனை வெறித்துக்கொண்டு உள்ளுக்கு உக்கிப்போய்க் கொண்டிருந்தாள். தன் எண்ணத்திலேயே அவனைச் சுட்டுவிட்ட ஏக்கம், இவ்வளவு கிட்ட இருந்தும் அவளுக்கும் அவனுக்குமிடையில் அவள் உண்ர்ந்த எட்டாத தூரம். அவளும் ஒரு தீயில் குளித்துக்கொண்டு தானிருந்தாள். - இந்த ஐந்து வருடங்களாய் அவனுள்ளும் ஏதோ நேர்ந்துகொண்டு தானிருந்தது. அவனுடைய உடல் நிலையையும் மனம் படக்கூடிய பாட்டையும் உத்தேசித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/131&oldid=1283334" இலிருந்து மீள்விக்கப்பட்டது