பக்கம்:கங்கா.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

கங்கா


ஆபீஸில் அவனுக்கென்று தனி இடவசதியும் வேலை வசதியும் ஏற்பாடாயின. இஷ்டப்பட்டால், செளகரியப் பட்டால், அவன் ஆபீஸ்ாக்கு வரலாம். அல்லது வீட்டி லேயே வேலையைச் செய்து ஆள் மூலம் அனுப்பலாம்: சில சமயங்கள் வேலை செய்யாமலும் இருக்கலாம். ஆனால் அவன் வெறி பிடித்தாற்போல் உழைத்தான். அம்பு பாய்ந்த மிருகம் இடந்தெரியாமல் அங்குமிங்கு மாய் வேகமாய் ஓடுவதுபோல் அவன் வேலையில் முனை கையில் அவனுக்கு குறுக்கே எவரும் ஏதும் சொல்லவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. வேலை வெறியி லேயே தன்னை மறக்க முயன்றான். ஆயினும் அம்மாதிரி முடுக்கிக்கொண்ட வேகம் நீடித்து நிற்க முடியாதாகையால் அவன் மறுபடியும் தன்னிடமே மீளும் நேரங்கள், அவனை விழுங்கக் காத்துக்கொண்டே இருந்தன. அம்மாதிரி நேரங்களில் எவரும் அவனிடம் அண்டமுடியாதபடி அவன் இருந்தான்.அநேக வேளைகள் மாடியறைக் கதவு மூடியபடியே யிருக்கும். கெளரி அறைக்கு வெளியே கைகளைப் பிசைந்து கொண்டு, பீதியும் கவலையும் அவளில் ஏற்றிய பிரமிக்கத் தக்க அழகில் மிளிர்ந்துகொண்டு நிற்பாள். உள்ளே என்ன பண்ணிண்டிருக்கார் ? என்னவாவது பண்ணின்டுடுவாரோ ? கதவின் சந்து வழி தைரியமிருந்தால் எட்டிப் பார்ப் பாள்: சாய்வு நாற்காலியிலே சாஞ்சுண்டு மண்டைக்குப் பின்னால் கைகோத்துண்டு என்ன யோசனை பண்ணிண் டிருக்கிறார்? அதே கேள்விதான் அறைக்குள் அவனுக்கும் தோன் றிக்கொண்டிருந்தது: திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/132&oldid=1283335" இலிருந்து மீள்விக்கப்பட்டது