பக்கம்:கங்கா.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

கங்கா


படாத கஷ்டங்கள் பட்டு, தன் முயற்சியாலேயே படித்து, உத்தியோகமும் தானே தேடிக்கொண்டு, படிப்படியாக உயர்ந்து, தானே முன்னுக்கு வந்து, மனிதர்களோடு மனிதனாகத் தானும் தன்னாலே தலைநிமிர்ந்து ஆகி....... ஆகி?......... ஆகி ?? உச்சாணிக் கிளையிலிருந்து இது மாதிரிச் சறுக்கித் தடாலென்று விழவா ? இதுதான் தன்னை உறுத்தும் கேள்விக்குப் பதிலா ? கெளரி, ஜன்னலுக்கு அலங்காரமாய்க் கட்டியிருந்த வெண்திரை, வண்ணான் மடிப்பிலிருந்து பிரிந்து வந்த துரிய வெண்மையுடன் காற்றில் படபடத்தது. அவன் கேள்வி முற்றுக்கூடப் பெறாமல் பந்துபோல் அவனிடம் திரும்பத் திரும்ப வந்தது. அதனின்று அவன் ஒடி ஒளியப் படும் அவதிக்குச் சாவே மேல் என்று தோன் றிற்று. குனிந்த தலையுடன் இறக்கை யொடிந்த பறவை போல் அவன் மெளனமாய் உட்கார்ந்திருப்பதைக் காண் கையில் வயிறு ஒட்டிக்கொண்டது. ஜீவ தாதுவே அவனுள் கருகி விட்டாற் போலிருந்தது. கெளரி கட்டிலண்டை வந்து நின்றாள். கவிழ்ந்து கிடக்கும் அவன் உடல் குலுங்குவதைக் கண்டாள். பிறகு என்ன நேர்ந்ததென அவளுக்கே தெரியாது. அவளை ஒரு வெள்ளம் அடித்துக்கொண்டு போயிற்று. மெதுவாய் அவனை மல்லாத்தி மூர்க்கமான பரிவுடன், அப்படியே வாரி இறுகத் தழுவிக்கொண்டாள். விடியற்காற்று ஜன்னல் வழி உள் புகுந்து அவர்கள் மேல் சில்லென்று மோதிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/134&oldid=1283337" இலிருந்து மீள்விக்கப்பட்டது